/* */

செப். 12 - இல் புதுக்கோட்டைக்கு இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வருகை

முதலில் நகர் மன்ற வளாகத்தில் வேலை வாய்ப்பு முகாம், மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் நடைபெற நிகழ்ச்சி இருக்கிறது.

HIGHLIGHTS

செப். 12  - இல் புதுக்கோட்டைக்கு   இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்  வருகை
X

செப்டம்பர் 12ஆம் தேதி இளைஞர் அணிச் செயலாளரும் எம்எல்ஏவுமான உதயநிதி  ஸ்டாலின் கலந்து கொள்ளும்  நிகழ்ச்சி நடைபெறும்  நகர்மன்ற  வளாகத்தை ஆய்வு செய்த  புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா  

புதுக்கோட்டையில் செப்.12-இல் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக திமுக இளைஞரணி செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதிஸ்டாலின் வருகிறார் என மாவட்ட திமுக தகவல் தெரிவித்துள்ளது.

திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக முதல் முறையாக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகிறார்.புதுக்கோட்டை நகர் மன்ற வளாகத்தில் செப்டம்பர் 12-ஆம் தேதி நடைபெறும், வேலைவாய்ப்பு முகாம், மாற்று கட்சியினர் திமுகவில் இணையும் விழா, திருமண விழா, சிலை திறப்பு விழா போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

புதுக்கோட்டை நகரில் முதல் நிகழ்ச்சியாக, நகர் மன்ற வளாகத்தில் வேலை வாய்ப்பு முகாம், மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் விழா நடைபெற இருக்கிறது. முதல் நிகழ்ச்சி நடைபெறும் இடமான நகர்மன்ற வளாகத்தை, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் வை.முத்துராஜா, மாவட்ட பொருளாளர் ஆ.செந்தில், நகர செயலாளர் க.நைனா முகமது, இளைஞரணி அமைப்பாளர் சண்முகம் உள்ளிட்டோர் இன்று ஆய்வு செய்தனர். ஆய்வில், திமுக நிர்வாகிகள் ராஜேஸ்வரி சுப. சரவணன்,அப்புக்களை உள்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 29 Aug 2021 12:12 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு