/* */

புதுக்கோட்டை- கரம்பக்குடி சாலையில் காலி குடங்களுடன் பெண்கள் மறியல்

ஊராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது

HIGHLIGHTS

புதுக்கோட்டை- கரம்பக்குடி சாலையில் காலி குடங்களுடன் பெண்கள் மறியல்
X

புதுக்கோட்டை-கரம்பக்குடி சாலையில் குடிநீர் தட்டுப்பாட்டைக்கண்டித்து காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்

புதுக்கோட்டை அருகே குடிநீர் வராததை கண்டித்து பெண்கள் காலி குடத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் துவார் கெண்டையம் பட்டி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இங்கு சில பகுதிகளுக்கு மட்டும் குடிநீர் வருவதாகவும் பல பகுதிகளுக்கு குடிநீர் நீண்ட காலமாக வரவில்லை என்றும் கூறப்படுகிறது.வரும் தண்ணீரும் கலங்கலாகவும் 2 மற்றும் 3 குடங்கள் மட்டுமே வருவதால் பொதுமக்கள் நீண்ட தூரம் சென்று குடிநீர் எடுத்து வரும் அவலம் ஏற்பட்டுள்ளது

இது குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த அந்த பகுதி பெண்கள் சனிக்கிழமை திடீரென்று காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் புதுக்கோட்டை கறம்பக்குடி சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் ஊராட்சியை நிர்வாகத்துடன் கலந்து பேசி குடிநீர் வருவதற்கான நடவடிக்கைகளை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததைத் தொடர்ந்து சாலைமறியல் கைவிடப்பட்டது.

Updated On: 12 March 2022 11:45 AM GMT

Related News