/* */

கிராமசபை கூட்டம் ரத்து.. டாஸ்மாக் கடைகளை மூடவில்லை: சிபிஎம் மாநிலச் செயலாளர் கேள்வி

தமிழகத்தில் படிப்படியாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் குறிப்பாக இந்த காலகட்டத்தில் நேரத்தையாவது குறைக்க வேண்டும்

HIGHLIGHTS

கிராமசபை கூட்டம் ரத்து.. டாஸ்மாக் கடைகளை மூடவில்லை: சிபிஎம் மாநிலச் செயலாளர் கேள்வி
X

புதுக்கோட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில குழு கூட்டத்தில் சிபிஎம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்

தமிழக அரசு கிராம சபை கூட்டத்தை ரத்து செய்துள்ளது ஆனால் அரசு டாஸ்மாக் கடைகளை ஏன் மூடவில்லை என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.

புதுக்கோட்டையில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் நடைபெற்றது இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பாலகிருஷ்ணன் மேலும் கூறியதாவது: மத்திய நெடுஞ்சாலை திட்டத்திற்கு தமிழக அரசு ஒத்துழைப்பு தரும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் நெடுஞ்சாலைகள் தரர் உயர்த்தப்பட வேண்டும் என்பது மாற்று கருத்து இல்லை. ஆனால் கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்படுகிறதா என்பது கேள்விக்குறி தான் தமிழக முதல்வர் கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்குவதற்கான உத்தரவாதத்தை அளிக்க வேண்டும்

எட்டு வழிசாலை தொடர்பாக உச்சநீதிமன்றம் பசுமை தீர்ப்பாயத்தின் அனுமதி பெற்ற பிறகு இந்த சாலை தொடங்கலாம் என்று கூறியுள்ளது.எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுக எட்டு வழி சாலை வரக்கூடாது என்று கூறியது. ஆனால் தற்போது நெடுஞ்சாலை திட்டத்திற்கு தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்கும் என்று கூறியுள்ளதால் அந்த பகுதி மக்கள் தற்போது ஒருவித பயத்துடன் கடந்த சில நாட்களாக இருந்து வருகின்றனர்

பிரதமரிடம் தமிழக முதல்வர் எட்டுவழிச்சாலை கூடாது என்று ஏற்கெனவே வலியுறுத்தி இருந்தார். தற்போது எட்டுவழிச்சாலை திட்டத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பதை முதல்வர் தெளிவு படுத்த வேண்டும்

நீர்நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும் ஆக்கிரமிப்பு எடுக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால் தமிழக அரசு உரிய முறையில் ஆய்வு செய்து நீர்நிலை ஆக்கிரமிப்புகளால் கட்டப்பட்டு உள்ள கட்டிடங்களை இடிக்க வேண்டும் அவ்வாறு கட்டிடங்களை இடிக்கும் போது மாற்று இடம் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.தமிழகத்தை மதவெறி மாநிலமாக மாற்றுவதற்கு பாஜக முயற்சி செய்கிறது

தற்போது உள்ள சூழ்நிலையில் கட்டாயப்படுத்தி யாரையும் மதமாற்றம் செய்ய முடியாது. ஒருவர் விருப்பப்பட்டு மற்றொரு மதத்திற்கு மாறினால் யாரும் எதுவும் செய்ய முடியாது. உரிய பாதுகாப்புடன் கிராம சபை கூட்டத்தை நடத்துவது தப்பு கிடையாது. ஆனால் அனைத்து கிராமங்களிலும் நடக்கும்போது வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும்.

டாஸ்மாக் கடைகளை படிப்படியாக தமிழக அரசு மூட வேண்டும்.நோய்த்தொற்று காலத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டிய அவசியமில்லை.எல்லாவற்றிற்கும் ஊரடங்கு தமிழக அரசு போடுகிறது. ஆனால் டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் ஊரடங்கு போடுவது கிடையாது. டாஸ்மாக் விவகாரத்தில் அரசின் செயல்பாடு சரி இல்லை. இந்த சூழலில் டாஸ்மாக் கடைகளின் நேரத்தையாவது குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபால் மீது பல்வேறு புகார்கள் வந்தது அடிப்படையில்தான் அவர் மீது வழக்குப் போடப்பட்டு கைது செய்யப்பட்டார். ஆனால் தற்போது நீதிமன்றம் இதற்கு தகுந்த ஆதாரங்கள் இல்லை என்று அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.இந்த விவகாரத்தில் உண்மை நிலவரத்தை தமிழக அரசு விளக்க வேண்டும்.தேர்தலை மனதில் வைத்து தான் இந்த ஆண்டு பட்ஜெட் இருக்கும்.

மாநில அரசு நகை கடன் தள்ளுபடி செய்யும் போது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கியுள்ள கடனை தள்ளுபடி மத்திய அரசு தயங்குவது ஏன்

தமிழக அரசு நகை கடன் தள்ளுபடி விவகாரத்தில் தேவையற்ற நிபந்தனைகளை விதித்துள்ளது.அந்த நிபந்தனைகளை தளர்த்தி உரிய பயனாளிகளுக்கு நகைகடன் தள்ளுபடி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழக அரசு அறிவிக்கும் போது ஒரு விதமாக அறிவிக்கிறார்கள் ஆனால் அதை நடைமுறைப் படுத்தும் போது பல்வேறு நிபந்தனைகளை விதிக்கிறார்கள்.

நகை கடன் தள்ளுபடி விவகாரத்தில் 6,000 கோடி என்று அறிவித்துவிட்டு ஒரு குறிப்பிட்ட தொகை மட்டுமே கூட்டுறவு சொசைட்டிகளுக்கு அரசு வழங்கியுள்ளது. இதனால் கூட்டுறவு சொசைட்டி களின் நிதி சுமை அதிகமாகி உள்ளது. தாலிக்கு தங்கம் திட்டத்தில் அரசு பல்வேறு நிபந்தனைகளை விதித்து உள்ளதால் உண்மையான பயனாளிகளுக்கு ஏழை எளியவர்களுக்கு இந்த திட்டத்தால் பயன் கிடைக்க முடியாத சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. அரசு நிபந்தனைகளை உடனடியாக தளர்த்த வேண்டும்

தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினர் மற்றும் கடற் கொள்ளையர்களால் தாக்கப்படுவதற்கு காரணம் மத்திய அரசுதான். பொங்கல் தொகுப்பு திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக தமிழக முதல்வரே தெரிவித்துள்ளார். இதற்கு முதல்வர் உடனடியாக விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்க வேண்டும். முன்னாள் அமைச்சர் ஒருவர் மீது வழக்கு போடுகிறார்கள், தேடுகிறார்கள் ஆனால் அவரே திமுகவில் சேர்ந்தார் என்றால், அவர் மீது எந்த நடவடிக்கையும் திமுக எடுப்பது கிடையாது இது எந்த விதத்தில் நியாயம்.யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் என்றார் கே. பாலகிருஷ்ணன்.


Updated On: 25 Jan 2022 10:00 AM GMT

Related News