/* */

வன்னியன் விடுதி ஜல்லிக்கட்டு 16ஆம் தேதிக்கு பதிலாக மற்றொரு தேதியில் நடத்தப்படும்

கடந்த 62 ஆண்டுகளாக புதுக்கோட்டை மாவட்டம் வன்னியன் விடுதி ஜல்லிக்கட்டு நடைபெற்று வந்தது

HIGHLIGHTS

வன்னியன் விடுதி ஜல்லிக்கட்டு 16ஆம் தேதிக்கு பதிலாக மற்றொரு தேதியில் நடத்தப்படும்
X

 திமுக இலக்கிய அணி சார்பில் தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 

ஊரடங்கு காரணமாக புதுக்கோட்டை மாவட்டம் வன்னியன் விடுதி ஜல்லிக்கட்டு 16-ஆம் தேதிக்கு பதிலாக விரைவில் அறிவிக்கப்படும் மற்றொரு தேதியில் நடத்தப்படும் என்றார் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன்.

புதுக்கோட்டை நகராட்சியில் பணியாற்றும் நூற்றுக்கு மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு திமுக இளைஞரணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் விழாவும் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் எஸ். ரகுபதி மற்றும் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு கரும்பு உள்ளிட்ட பொருள்களை வழங்கினர். பணியாளர்கள் சமூக இடைவெளி விட்டு நிற்க வைக்கப்பட்டு ஒவ்வொருவராக வரவழைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது: திமுக இலக்கிய அணி சார்பில் தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கடந்த 62 ஆண்டுகளாக புதுக்கோட்டை மாவட்டம் வன்னியன் விடுதி ஜல்லிக்கட்டு நடைபெற்று வந்தது இந்த ஆண்டு 16ஆம் தேதி முடிவு செய்யப்பட்டு அதற்கான அனுமதியும் தமிழக அரசு அளித்துள்ளது. ஆனால் அன்றைய தினம் விடுமுறை என்பதால் அந்த தேதியில் ஜல்லிக்கட்டு நடத்தப்படாமல் மற்றொரு தேதியில் ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடைபெறும் என்றார். நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா, முன்னாள் எம்எல்ஏ ரா.சு.கவிதை பித்தன், திமுக நிர்வாகிகள் மணிமொழி மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

Updated On: 12 Jan 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  4. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  5. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  6. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  7. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  8. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!