/* */

தண்டோரா அடித்து‌ பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

முள்ளூர் ஊராட்சியில் முழு ஊரடங்கு

HIGHLIGHTS

தண்டோரா அடித்து‌ பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
X

புதுக்கோட்டை மாவட்டம் முள்ளூர் ஊராட்சியில் தண்டோரா அடித்து‌ முழு ஊரடங்கு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் ஊராட்சி நிர்வாகம், ஊரடங்கை மீறி செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த 24ம் தேதி வரை முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டை அருகே உள்ள முள்ளூர் ஊராட்சியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அங்கு உள்ள கிராம மக்களுக்கு முழு ஊரடங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தெருத்தெருவாக தண்டோரா அடித்து பகல் 12 மணிவரை மளிகை காய்கறி கடைகள் இயங்கும் என்றும் தேவையின்றி பொதுமக்கள் வெளியே செல்லக்கூடாது என்றும் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் மேலும் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்படுவோர் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.


Updated On: 11 May 2021 10:34 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  3. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  4. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  5. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  6. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  7. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  8. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  9. இந்தியா
    சென்னை ஐ.ஐ.டி.,யின் பறக்கும் டாக்ஸி!
  10. வீடியோ
    Pak.ஆக்கிரமிப்பு Kashmir-ல் வெடித்த போராட்டம் | India-வின் தந்திரமான...