/* */

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிக்கு மணிமண்டபம் கட்ட நடவடிக்கை

புதுக்கோட்டையில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிக்கு மணிமண்டபம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மெய்யநாதன் பேட்டி

HIGHLIGHTS

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிக்கு மணிமண்டபம் கட்ட நடவடிக்கை
X

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிக்கு மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

இந்தியாவின் பெண் முதல் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் 136 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இன்று தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் மச்சுவாடி பகுதியில் உள்ள முத்துலட்சுமி ரெட்டி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

இந்நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கூறியதாவது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சிலை அமைத்து கொடுத்தது திமுக ஆட்சி காலத்தில்தான். அதேபோல் அதிமுக ஆட்சிக்காலத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்த நிலையில், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. எனவே தமிழக முதலமைச்சரிடம் மணிமண்டபம் கட்டுவது குறித்து எடுத்துக்கூறி மணிமண்டபம் கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் . அதேபோல் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பெயரை வைப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.


Updated On: 30 July 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனி சமதர்மபுரம் நாடார் மண்டகப்படி திருவிழா..!
  2. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  3. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  4. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  7. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  8. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  9. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...
  10. வீடியோ
    🔥நீ மேல கை வச்சு பாரு🔥தொண்டர்கள் உச்சகட்ட ஆரவாரம் |🔥Annamalai...