/* */

வருவாய் கோட்டாட்சியர் வாகனத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

ஆளில்லா ரயில்வே சுரங்கப் பாதையை மூடுவது. ஏற்கெனவே செயல்பட்டு வந்த ரயில்வே கேட்டை திறப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது

HIGHLIGHTS

வருவாய் கோட்டாட்சியர் வாகனத்தை முற்றுகையிட்ட  பொதுமக்கள்
X

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே துடையூர் ரயில்வேகேட்டை திறந்து வைத்து செல்ல முயன்ற வருவாய் கோட்டாட்சியர் ஜீப்பை பொதுமக்கள் முற்றுகையிட்டு சிறைபிடிப்பு

புதுக்கோட்டை அடுத்த நார்த்தாமலை அருகே துடையூர் ரயில்வே கேட்டை திறந்து வைத்து செல்ல முயன்ற வருவாய் கோட்டாட்சியர் வாகனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தமலை அருகே துடையூரை சேர்ந்த டாக்டர் சத்யா, ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கி இருந்த நீரில் மூழ்கி நேற்று முன்தினம் நள்ளிரவில் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் நேற்றுபொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.இதையடுத்து, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் பாலதண்டாயுதபாணி தலைமையில் ரயில்வே துறை அதிகாரிகள் அரசு அதிகாரிகள் மற்றும் துடையூர் ஊர் பிரமுகர்கள் மற்றும் முக்கியபிரமுகர்கள் கலந்துகொண்ட அமைதிப் பேச்சுவார்த்தை கீரனூரில் நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில், துடையூர் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே சுரங்கப் பாதையை மூடுவது. அதேபோல் ஏற்கெனவே செயல்பட்டு வந்த ரயில்வே கேட்டை திறப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.



அதன்படி, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் பாலதண்டாயுதபாணி ,ரயில்வே துறை அதிகாரிகள் ,காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள்ல் துடையூர் பகுதிக்கு நேரில் வந்து ரயில்வே கேட்டை திறந்து வைத்தனர். பின்னர், வருவாய் கோட்டாட்சியர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற போது பொதுமக்கள் அவரது ஜீப்பை முற்றுகையிட்டு சிறைப்பிடித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஊர் பிரமுகர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் வருவாய் கோட்டாட்சியர் வாகனத்தை முற்றுகையிட்டு சிறை பிடித்தவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருவாய் கோட்டாட்சியரை அனுப்பி வைத்தனர்.

Updated On: 19 Sep 2021 10:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?