/* */

பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு வகையில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிவாரண உதவி தொகைகளை ஆட்சியர் கவிதா ராமு வழங்கினார்.

HIGHLIGHTS

பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு நிவாரண உதவி  வழங்கல்
X

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு வகையில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிவாரண உதவி தொகைகளை ஆட்சியர் கவிதா ராமு வழங்கினார்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு வகையில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிவாரண உதவி தொகைகளை ஆட்சியர் கவிதா ராமு வழங்கினார்.

கொரோனா நோய் தடுப்பு பணியின் போது உயிரிழந்தவர்கள் கொரோனா நோய் தடுப்பு பணியின் போது, நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த கொன்னைப்பட்டி ஊராட்சி செயலாளர் சேகர், ஆலங்குடி வருவாய் ஆய்வாளர் குணசேகர் ஆகியோர்களின் குடும்பத்தினருக்கு, முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.25 லட்சமும், நீரில் மூழ்கி இறந்த 2 நபர்களுக்கு தலா ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.52 லட்சத்திற்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு இன்று வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், கொன்னைப்பட்டி ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வந்த சேகர், ஆலங்குடி சரக வருவாய் ஆய்வாளர் குணசேகர் ஆகியோர் கொரோனா நோய் தடுப்பு பணியின் போது, கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர் உயிரிழந்த ஊராட்சி செயலாளர் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.25 லட்சம் என மொத்தம் ரூ.50 லட்சம் நிதி ஒப்பளிப்பு செய்து ஆணையிடப்பட்டது.

மேலும் புதுக்கோட்டை தாலுகாவை சேர்ந்த சின்னையா மற்றும் இலுப்பூர் தாலுகாவை சேர்ந்த தியாகராஜன் ஆகியோர் அண்மையில் நீரில் மூழ்கி இறந்ததை தொடர்ந்து, முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.2 லட்சம்நிதி ஒப்பளிப்பு செய்து ஆணையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை முதலமைச்சர் பொதுநிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்ட காசோலையினை மாவட்ட ஆட்சித் தலைவர் மேற்கண்ட நபர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் வழங்கி, ஆறுதல் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கருப்பசாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் கணேசன்,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) தமிழ்செல்வி ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 1 March 2022 8:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?