/* */

உயிரிழந்த கராத்தே மாணவர் குடும்பத்திற்கு புதுக்கோட்டை எம்எல்ஏ ஆறுதல்

கராத்தே மாணவர் பாலாஜியின் குடும்பத்துக்கு புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா, ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்கி ஆறுதல் கூறினார்

HIGHLIGHTS

உயிரிழந்த கராத்தே மாணவர்  குடும்பத்திற்கு புதுக்கோட்டை எம்எல்ஏ ஆறுதல்
X

கராத்தே சாகச நிகழ்ச்சியில் உயிரிழந்த பாலாஜியின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரணம் தொகை வழங்கிய புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா

கராத்தே மாணவர் பாலாஜியின் குடும்பத்தினருக்கு புதுக்கோட்டைஎம்எல்ஏ முத்துராஜா, ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்கி ஆறுதல் கூறினார்

புதுக்கோட்டை அடப்பன்வயல் அருகே உள்ள திடலில் கடந்த 14ஆம் தேதி கராத்தே தகுதி பட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில், புத்தாஸ் வீரக்கலை கழகம் சார்பில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்களுடைய சாகச நிகழ்ச்சிகளை செய்து காண்பித்தனர்.அந்த நிகழ்ச்சியில், ஒருவர் மீது டிராக்டர் ஏற்றுவது, பாறாங்கற்களை வயிற்றில் வைத்து உடைப்பது, டியூப் லைட்டை மண்டையில் அடித்து உதைப்பது உள்ளிட்ட பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை கராத்தே மாணவர்கள் செய்து காண்பித்தனர்.

அப்போது, பாலாஜி என்ற கல்லூரி மாணவன் கையில் துணியைக் கட்டிக்கொண்டு, அதில் தீப்பற்ற வைத்து ஓட்டை உடைக்கும் சாகச நிகழ்ச்சியை செய்து காண்பித்தார்.அப்போது எதிர்பாராத விதமாக அவர் உடம்பில் தீ பற்றி எரிந்தது. உடனடியாக அருகில் இருந்த மாணவர்கள், தீயை அணைத்து 108 வாகனம் மூலம், புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். கடந்த 4 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த மாணவன் பாலாஜி சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்துவிட்டார்.

இதனை அறிந்த புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா இன்று கீழ 3ம் வீதியில் உள்ள பாலாஜியின் இல்லத்திற்கு சென்று அவருடைய குடும்பத்தாருக்கு ரூ.10000 நிதி உதவி வழங்கி ஆறுதல் கூறினார்.இந் நிகழ்வில் நகரச் செயலாளர் நைனாமுகமது, நகரத் துணைச் செயலாளர் மதியழகன், வட்டச்செயலாளர் கண்மணி சுப்பு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.


Updated On: 22 Aug 2021 9:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வானத்து சல்லடையில் மேகம் ஊற்றிய நீர், மழை..!
  2. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  3. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  5. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  6. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 173 கன அடியாக அதிகரிப்பு
  8. ஈரோடு
    ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் மாநில கைப்பந்து முகாம் நிறைவு விழா
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் பொதுமக்களுக்கு இலவசமாக மோர் வழங்கிய போலீசார்
  10. வீடியோ
    🔥உனக்கு 24-மணிநேரம்தான் Time விஜயபாஸ்கர் மிரட்டல்🔥|மோதிக்கொண்ட...