/* */

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்த புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா

ஆரம்ப சுகாதார நிலையத்தில் பழுதான கட்டிடத்தை பார்வையிட்டு, விரைவில் சரி செய்து தருமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்

HIGHLIGHTS

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்த புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா
X

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்த புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா.

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை புதுக்கோட்டை எம்எல்ஏ டாக்டர் வை. முத்துராஜா ஆய்வு செய்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியதையடுத்து பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்ததால் இந்தப் பகுதிகளில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா, நேரடியாக சென்று ஆய்வு பணியை மேற்கொண்டு பொதுமக்கள் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக இன்று புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி புதுக்கோட்டை ஒன்றியத்துக்குள்பட்ட, வாராப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை நேரில் சென்று ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.அதேபோல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பழுதான கட்டிடத்தை பார்வையிட்டு, விரைவில் சரி செய்து தருமாறு உரிய அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். இந்த நிகழ்வில், அரசு அதிகாரிகள் மருத்துவர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர் இராமகிருஷ்ணன், ஊராட்சி மன்ற செயலாளர் தனபால், கவுன்சிலர் வெண்ணிலா கருப்பையா, மணிமாறன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Updated On: 12 Nov 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  2. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  3. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  4. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  7. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்