/* */

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடப்பாண்டின் கொடிநாள் வசூல் இலக்கு ரூ.1.44 கோடி

முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் கொடி நாள் வசூலை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தொடக்கி வைத்தார்

HIGHLIGHTS

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடப்பாண்டின் கொடிநாள் வசூல் இலக்கு ரூ.1.44 கோடி
X

புதுக்கோட்டை மாவட்ட நடப்பு 2022 ஆம் ஆண்டிற்கு கொடிநாள் வசூல் இலக்கு ரூ.1,43,94,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் கொடி நாள் வசூலினை, மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு இன்று தொடக்கி வைத்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: இந்திய திருநாட்டை பாதுகாத்து வரும் முப்படை வீரர்களின் தியாக உணர்வை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ஆம் நாள் படைவீரர் கொடிநாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்றையதினம் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொடி நாள் வசூலினை உண்டியலில் பணம் செலுத்தி தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த கொடி நாள் நிதி வசூல் மூலம் வரும் நிதியினை முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களை சார்ந்தோர்கள் நலனுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2021 ஆம் ஆண்டிற்கு இலக்கான ரூ.1,36,27,000ஐ விட ரூ.1,36,67,000 அதாவது 100.29% அதிகமாக கொடி நாள் நிதி வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது. இதே போன்று நடப்பு 2022 ஆம் ஆண்டிற்கு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ரூ.1,43,94,000 கொடி நாள் நிதி வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே அரசு அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் உள்ளிட்ட அனைவரும் அதிகமாக நிதி வழங்கி முன்னாள் படைவீரர்கள் நலனுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சித்தலைவர்கவிதா ராமு.

அதனைத்தொடர்ந்து, முன்னாள் படை வீரர்கள் மற்றும் சார்ந்தோர்களின் 17 சிறார்களுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.2,56,000 -க்கான காசோலைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் சீ.விஜயகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) து.தங்கவேல், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சே.மணிவண்ணன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கொடி நாள் என்பது என்ன... இந்தியாவின் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தின் ஏழாம் நாளை படை வீரர் கொடி நாளாக இந்திய அரசும் இந்திய மாநில அரசுகளும் கடைப்பிடிக்கின்றன. இக்கொடி நாள் 1949ஆம் ஆண்டு டிசம்பர் ஏழாம் நாள் முதல் இந்தியா முழுமைக்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.

தியாக உணர்வுடன் பணியில் ஈடுபடும் முப்படை வீரர்களின் குடும்ப நலன்களையும், முன்னாள் படை வீரர்களின் நலன்களையும் காக்கும் சமுதாயக் கடமையை நிறைவேற்றும் வகையில், கொடி விற்பனையின் மூலமும் நன்கொடைகள் மூலமூம் திரட்டப்படும் நிதியை படை வீரரின் குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காகவும், உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது

Updated On: 7 Dec 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!