பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!

பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
X
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தலை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ. கோவிந்தராஜன் திறந்து வைத்தார்.

பெரியபாளையத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் டிஜே.கோவிந்தராஜன் எம்எல்ஏ பங்கேற்பு.

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் சுட்டெரிக்கும் கோடை வெயிலின் காரணமாக பொது மக்களின் தாகம் தணிக்கும் வகையில் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜா ஏற்பாட்டில் பெரியபாளையம் பஜார் பகுதியில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பிஜே மூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்

கேவி.லோகேஷ் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டிஜே கோவிந்தராஜன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் முகமது மாலிக் ஆகியோர் கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.பின்னர் பொதுமக்களுக்கு தர்பூசணி,மோர், பழச்சாறு, வெள்ளரிக்காய், உள்ளிட்ட குளிர்வகை பொருட்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.இதில் பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் விபி.ரவிக்குமார் அவைத்தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சங்கர், வழக்கறிஞர்கள் முனுசாமி,சீனிவாசன்,நிர்வாகிகள் அப்புன்,ஞானசேகர்,விமல்,மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் கச்சூர் பகுதியில் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் தலைமையில் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் சீத்தஞ்சேரி ஜான் பொன்னுசாமி தலைமையிலும் நடைபெற்ற தண்ணீர் பந்தலை எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி, இளநீர், குளிர் பானங்களை வழங்கினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!