/* */

புதுக்கோட்டை வழக்கறிஞர் சங்கம் சார்பில் சட்ட அமைச்சர் ரகுபதிக்கு பாராட்டு விழா

சட்டப் படிப்பு என்பது ஒரு சிறப்பான படிப்பு. சட்ட படிப்பு படித்தவர்கள் எதிலும் சாதிக்க முடியும் சாதித்து காண்பிக்க முடியும்

HIGHLIGHTS

புதுக்கோட்டை வழக்கறிஞர் சங்கம் சார்பில்  சட்ட அமைச்சர் ரகுபதிக்கு பாராட்டு விழா
X

புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில்  சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வழக்கறிஞர் சார்பில்     நடைபெற்ற பாராட்டு விழாவில்    நினைவு பரிசு வழங்கும் அரசு வழக்கறிஞர்கள்

புதுக்கோட்டை மாவட்ட வழக்கறிஞர் சங்கம் சார்பில் இன்று நீதிமன்ற வளாகத்தில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தமிழக சட்டத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ரகுபதிக்கு வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் சால்வை அணிவித்து நினைவுப் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

பின்னர் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசின் சட்டத்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் என்னை உற்சாகப்படுத்தும் விதத்தில் பாராட்டு விழா எடுத்த புதுக்கோட்டை வழக்கறிஞர் சங்கத்துக்கு நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இது எல்லாவற்றுக்கும் பொருத்தமானவர் எங்களுடைய தமிழக முதலமைச்சர்தான் ஏனென்று சொன்னால் எங்களை இயக்குபவர் தமிழக முதலமைச்சர் தான்.இன்றைக்கு நம்முடைய நாட்டில் நீதி நிர்வாகத்தை செம்மையோடு நடத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு அந்த சட்டத்துறை என்பது மிக முக்கியமான ஒன்றாக அனைத்து துறைகளுக்கும் வழிகாட்டியாக அமைந்திருக்கிற துறையாக இருக்கிறது.

என்னென்ன சட்டங்கள் அரசின் சார்பிலே கொண்டு வர வேண்டுமோ அவற்றை முன்னெடுத்துச் செல்கின்ற துறையாக சட்டத்துறை இருக்கின்ற காரணத்தால் உங்களோடு சேர்ந்து நானும் வழக்கறிஞராக இருக்கும் காரணத்தால் புதுக்கோட்டை மாவட்டத்தில் வழக்கறிஞராக பணியாற்றி அனுபவம் உள்ள காரணத்தாலும் எனக்கு இன்று சட்டத்துறை அமைச்சராக வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.

அதற்கு அடிப்படைக் காரணம் புதுக்கோட்டை நீதிமன்றம் புதுக்கோட்டை வழக்கறிஞர் சங்கம் இன்னும் சொல்லப்போனால் நம்முடைய நீதிமன்றத்தை முற்றிலும் பழமை தன்மை மாறாமல் இந்த நீதிமன்றம் முழுமையாக புதுப்பிக்கப்பட வேண்டும் என்பதற்காக சட்டமன்றத்தில் அதற்கான அனுமதியை தமிழக முதலமைச்சர் ஒப்புதலோடு நான் அறிவித்தேன் என்பதை இங்கே சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

எனவே நீதிமன்றம் பழமை தன்மை மாறாமல் அதே உறுதிப்பாடு இன்றைய நவீன வசதியுடன் உள்ளடக்கிய பழமை தன்மை மாறாமல் நீதிமன்றம் விரைவில் புதுப்பிக்கப்படும்.அதேபோல் நீதித்துறை செம்மையாக செயல்படுவதற்கு இட வசதி மிகவும் முக்கியம் வழக்கறிஞர்களுக்கு தங்களுடைய வாதத்தை எடுத்து வைப்பதற்கு நீதிமன்றத்தில் இடவசதி முக்கியமானதாக இருக்கிறது.சட்டப் படிப்பு என்பது ஒரு சிறப்பான படிப்பு. சட்ட படிப்பு படித்தவர்கள் எதிலும் சாதிக்க முடியும் சாதித்து காண்பிக்க முடியும்ன படிப்பு. சட்ட படிப்பு படித்தவர்கள் எதிலும் சாதிக்க முடியும் சாதித்து காண்பிக்க முடியும். எந்த துறையிலும் அவர்களால் நிச்சயமாக பிரகாசிக்க முடியும் . வழக்கறிஞர் சங்கத்தை பொருத்தவரை எந்த வேறுபாடு வித்தியாசமும் கிடையாது அமைச்சர் பதவி என்பது வரும் போகும். ஆனால் என்றைக்கும் வழக்கறிஞர் என்பது நிலையான அடையாளம். தொடர்ந்து மக்களுக்கு தொண்டு செய்வதில் ஓய்வின்றி உழைக்க போகின்றேன்.தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி தொடர்வதற்கு மக்களுக்கான நல்ல திட்டங்களை கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்வேன் என்றார் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி.

விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி அப்துல் காதர் உள்ளிட்ட நீதிபதிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் அட்ஹாட் கமிட்டி உறுப்பினர்கள் சின்னராசு, முருகேசன், ரவிச்சந்திரன், குமார், தனஞ்செயராமச்சந்திரன், ஜெகதீசன், பரமசிவம், மற்றும் மூத்த இளம் வழக்கறிஞர்கள், பெண் வழக்கறிஞர்கள், அரசு வழக்கறிஞர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 15 Dec 2021 10:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  2. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  3. வால்பாறை
    வால்பாறை சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    நண்பா..மனைவியை லவ் பண்ணுடா..! திருமண வாழ்த்து..!
  5. இந்தியா
    பெங்களூரு செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சியில் அவசர...
  6. வானிலை
    வடமேற்கு இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை, வெப்பநிலை 40 டிகிரிக்கு...
  7. சினிமா
    Indian 2 புதிய ரிலீஸ் தேதி இதுவா?
  8. வீடியோ
    DMK ஆட்சி, Kamarajar ஆட்சி Seeman சொன்ன பதில் !#seeman #seemanism #ntk...
  9. வீடியோ
    Kamarajar-ரிடம் படம் எடுக்க சொன்ன இயக்குநர் Sundaram ?#seeman...
  10. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!