/* */

நமோகேர்-2022 திட்டத்தில் பல்வேறு உதவிகளை செய்த புதுகை மாவட்ட பாஜக நிர்வாகி

பிரதமரின் நலத்திட்டங்களுக்காக டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் நடத்தி வரும் நமோகேர்-2022 திட்டத்தில் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன

HIGHLIGHTS

நமோகேர்-2022 திட்டத்தில் பல்வேறு உதவிகளை செய்த புதுகை மாவட்ட பாஜக நிர்வாகி
X

புதுக்கோட்டை மாலையீடு அருகே நமோகேர்-2022 திட்டத்தில், பல்வேறு உதவிகளை வழங்கிய ஏவிசிசி   கணேசன்

நமோகேர்-2022 திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட பாஜக நிர்வாகி ஏவிசிசி கணேசன் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தேசிய குழந்தைகள் பாதுகாப்புநல ஆலோசகர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் வழிகாட்டுதலின்படி பேரில், பாரத பிரதமரின் நலத்திட்டங்களுக்காக டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் நடத்திவரும் நமோகேர்-2022 திட்டத்தில் பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாலையீட்டில் தீ விபத்தினால் வீடுகளை இழந்து தவித்து வந்த குடும்பங்களுக்கு, உதவிடும் வகையில் சமையல் பாத்திரங்கள்,கட்டில்கள், கைலி,வேஷ்டி,ரெடிமேட் சட்டைகள், சேலைகள் ,பெட்ஷீட், போர்வைகள், துண்டுகள், உள்ளாடை துணிமணிகள், குடிநீர் குடங்கள், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான நிவாரண உதவிகளை, ஓய்வு பெற்ற ஊரக வளர்ச்சி இணை இயக்குநர் திட்ட இயக்குநர் ஏவிசிசி கணேசன் தலைமையில், புதுக்கோட்டை திலகர்திடல் ஏவிசிசி கல்வி குழுமங்களின் நிர்வாகி மல்லிகாகணேசன் மற்றும் ஆசிரியைகள் தேவிகா,சத்யா,ஆகியோர் வழங்கினர். புதுக்கோட்டை அருகே வீடுகள் எரிந்து சேதம் அடைந்த நிலையில் உடமைகளை இழந்து தவித்து வந்த பொது மக்களுக்கு பல் மற்றும் சமையல் சாமான்களை வழங்கிய ஏவிசிசி கணேசன் அவர்களின் குடும்பத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்

Updated On: 13 March 2022 7:49 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கனமான பொருளை தூக்கினால் அதீத வயிற்று வலி ஏற்படுகிறதா? - ஒரு எச்சரிக்கை...
  2. லைஃப்ஸ்டைல்
    எதுக்கு நீண்ட தூரம் வாக்கிங் போறீங்க? வீட்டிலேயே இதை ட்ரை பண்ணுங்க!
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வீட்டில் உள்ள வெள்ளி பொருட்கள் பளிச்சிட வேணுமா? - இந்த...
  4. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான மொறு மொறு ரிப்பன் பக்கோடா செய்வது எப்படி?
  5. இந்தியா
    சிக்கிமில் ஆளும் கட்சி அபார வெற்றி, அருணாச்சல பிரதேசத்தை அசால்ட்டாக...
  6. வீடியோ
    🔴LIVE : ADMKவுக்கு ஒரு சீட் கூட கிடைக்காது! IPDS திருநாவுக்கரசு...
  7. இந்தியா
    ஜாமீன் முடிந்து டெல்லி முதல்வர் திகார் சிறையில் சரண்..!
  8. வீடியோ
    🔴LIVE : அடுத்த கட்ட நகர்வு அரசியலா? | Raghava Lawrence பரபரப்பு...
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கொடிக்கம்பம் அமைப்பதில் திமுக - பாமக மோதல்..!
  10. திருவள்ளூர்
    சீரான மின்சாரம் வழங்க பொதுமக்கள் சாலை மறியல்..!