/* */

பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறுபான்மையின கைவினைஞர்கள் கடனுதவி

பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறுபான்மையின கைவினைஞர்கள் கடனுதவி பெற 25.11.2022 க்குள் விண்ணப்பிக்கலாம்

HIGHLIGHTS

பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறுபான்மையின கைவினைஞர்கள் கடனுதவி
X

பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறுபான்மையின கைவினைஞர்கள் கடனுதவி பெற 25.11.2022 க்குள் விண்ணப்பிக்கலாம்.

பொருளாதாரம் (economy) என்பது நாட்டின் அறியப்பட்ட பொருளாதார அமைப்பையோ இதர நிலப்பகுதியையோ கொண்டுள்ளது. அப்பகுதியின் சமூக ரீதியாக உற்பத்தியில், பரிமாற்றத்தில், விநியோகத்தில் மற்றும் பொருட்கள் மற்றும் சேவைகளின் நுகர்வில் பங்கேற்கும் பொருளாதாரக் காரணிகளையும் கொண்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட பொருளாதாரம் என்பது அதன் தொழில் நுட்ப பரிணாமம், வரலாறு மற்றும் சமூக நிறுவனம் ஆகியன அடங்கியுள்ள ஒரு வழிமுறையின் இறுதி விளைவுகளையும்; அதேபோல அதன் புவியியல், இயற்கை வளக் கொடை மற்றும் சூழல் ஆகியவற்றை முக்கியக் காரணிகளாக உள்ளடக்கியுள்ளது.

இத்தகைய காரணிகள் ஒரு பொருளாதாரம் செயல்படும் இடத்தில் சூழல், உள்ளடக்கம் மற்றும் பொருளாதார நிலைகள் மற்றும் அளவீடுகள் ஆகியவற்றைக் கொடுக்கின்றன.இன்று பொருளாதாரம் அல்லது அதன் பகுதியை ஆராயும் பதிவுற்ற மற்றும் விவரிக்கும் கல்விப் புலங்களின் வரிசையில் சமூக அறிவியல்களான பொருளாதாரம், அதேபோல வரலாற்றின் கிளைகளான (பொருளாதார வரலாறு) அல்லது புவியியல் (பொருளாதாரப் புவியியல்) ஆகியன அடங்கியுள்ளன.

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாம்கோ) மூலம், தமிழகத்தில் பொருளாதரத்தில் பின்தங்கிய சிறுபான்மை இனத்தை சேர்ந்த கைவினை கலைஞர்களுக்கு, விராசாட் திட்டத்தின் மூலம் கைவினை பொருட்கள் செய்ய பயன்படும் மூலப்பொருட்கள், கருவிகள், இயந்திரங்கள் வாங்குவதற்கு கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள சிறுபான்மையின இனத்தைச் சார்ந்த கைவினைஞர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம்; விரசாட் திட்டத்தின் கீழ் 2022-23ம் ஆண்டிற்கு கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டததின் கீழ் ஏழ்மை நிலையில்உள்ள சிறுபான்மையினத்தைச் சார்ந்த கைத்தறி நெசவாளர்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரிப்போர் ஆகியோரின் நிதி ஆதாரத்தை மேம்படுத்தும் வகையில்ரூபவ் குறைந்த வட்டியில் கடன்வழங்கப்படவுள்ளது.

மேற்கண்ட கடன் தொகையில் தேசிய சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் 90% பங்குத் தொகையும்ரூபவ் டாம்கோ மூலம் 5% பங்குத் தொகையும், பயனடைவோர் மூலம் பங்குத் தொகை 5% ஆகும். இக்கடன் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள், நகரக் கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி ஆகியவற்றின் மூலம் வழங்கப்படுகிறது.

மேற்படி கடன்தொகை பெற விண்ணப்பதாரர் மதவழி சிறுபான்மையினரான முஸ்லீம், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தவர், பார்சீயர், ஜைனர் ஆகியோரில் ஒருவராக இருத்தல் வேண்டும். 18 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன் வழங்கப்படும். ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் வசிப்பவராயின் ரூ.98000-ம், நகர்ப்புறங்களில் வசிப்பவராயின் ரூ..120000-ம் உடையவராக இருத்தல் வேண்டும்.

பெறப்படும் கடன் தொகை 60 மாதத் தவணைகளில் திரும்ப செலுத்தப்பட வேண்டும். மேற்கண்ட கடன்பெற விண்ணப்பிக்க விரும்புவோர்ரூபவ் எதிர்வரும் 25.11.2022க்குள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில், முதல் தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

Updated On: 3 Nov 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  4. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  6. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  7. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  9. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  10. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்