/* */

மு.க.ஸ்டாலின் சமூகநீதி காவலரா? -பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேள்வி

மு.க.ஸ்டாலின் சமூகநீதி காவலரா? - என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேள்வி எழுப்பி உள்ளது.

HIGHLIGHTS

மு.க.ஸ்டாலின் சமூகநீதி காவலரா? -பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேள்வி
X

புதுக்கோட்டையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சார்பில் தடையை மீறி பேரணி நடந்தது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் மக்களாட்சியை பாதுகாப்போம் என்ற தேசிய பிரச்சாரத்தை வலியுறுத்தி இந்தியா முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் ஒற்றுமை அணிவகுப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் தென்காசி இராமநாதபுரம் சேலம் காஞ்சிபுரம் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இந்த ஒற்றுமை அணிவகுப்பு மற்றும் பொதுக் கூட்டங்கள் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று புதுக்கோட்டையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் மக்களாட்சியை பாதுகாப்போம் என்ற தேசிய பிரச்சாரத்தை முன்வைத்து ஒற்றுமை அணிவகுப்பு பேரணியை நடத்த போலீசார் ஏற்கனவே அனுமதி மறுத்திருந்தனர்.

இந்நிலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் ஒற்றுமை அணிவகுப்பு பேரணி பிரகதாம்பாள் மேல்நிலைப்பள்ளி அருகிலிருந்து தொடங்கப்பட்டது.

இந்தப் பேரணியில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அணிவகுப்பு பேரணியானது பிரகதாம்பாள் மேல்நிலைப் பள்ளி அருகில் இருந்து புறப்பட்டு புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் வந்தபோது போலீசார் பேரணியை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இதையடுத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகளுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் நடத்தப்பட்ட ஒற்றுமை அணிவகுப்பு பேரணியை தடுத்து நிறுத்தி அனைவரையும் கைது செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில துணைத் தலைவர் ஹாலித் முகம்மது

சமூக நீதி காவலன் என்று கூறிவரும் ஸ்டாலின் தமிழகத்தில் தி.மு.க. மாநாடு நடத்தினாலும் வேறு எந்த கட்சிகள் கூட்டங்கள் மற்றும் மாநாடுகள் நடத்தினாலும் அனுமதி வழங்குகிறார். இதேபோல தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பை நடத்துகின்றது. அதற்கெல்லாம் அனுமதி வழங்கிய தமிழக அரசு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் நடத்தப்படும் ஒற்றுமை அணிவகுப்புக்கு மட்டும் ஏன் தடை விதிக்கிறது என்று புரியவில்லை.

மக்களின் உரிமைகளை பறிப்பதற்கு அரசாங்கம் அல்ல மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு தான் அரசு. எனவே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய ஒற்றுமை பேரணிக்கு தடை விதித்த தமிழக அரசுக்கு எங்களுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

Updated On: 11 March 2022 9:37 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  3. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  5. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  6. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  7. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  8. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  10. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...