/* */

குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்

குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
X

படவிளக்கம் : குமாரபாளையம் ஜீவா சுமை தூக்குவோர் தொழிலாளர் சங்கம் சார்பில் மே தினவிழா கொண்டாடப்பட்டது.

குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்

குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் ஜீவா சுமை தூக்குவோர் தொழிலாளர் சங்கம் சார்பில், மே தின விழா கொண்டாடப்பட்டது. சேலம் சாலை, கிருஷ்ணா இரும்பு கடை அருகில், பள்ளிபாளையம் பிரிவு சாலை, உழவர் சந்தை அருகில் உள்ளிட்ட பல் இடங்களில் கொடியேற்றி வைக்கப்பட்டது. சங்க தலைவர் நஞ்சப்பன் தலைமை வகித்து, கொடியேற்றி வைத்தார். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மே தினத்தின் சிறப்புக்கள் குறித்து நிர்வாகிகள் அசோகன், சுப்ரமணி, பிரபாகரன், பாலசுப்ரமணி, பஞ்சாலை சண்முகம் உள்பட பலர் பேசினார்கள். இதில் சங்க உறுப்பினர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.

நிர்வாகிகள் பேசியதாவது:

மே நாள் அல்லது மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே முதலாம் தேதி (மே 1) உலக அளவில் கொண்டாடப்படுவதாகும்.

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் (chartists) ஆகும். சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கையாகும்.

1830களில் பிரான்சில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க வேண்டி இருந்தனர். இதை எதிர்த்து அவர்கள் பெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். 1834இல் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற கோஷத்தை முன்வைத்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இவையனைத்தும் தோல்வியில் முடிவடைந்தன.

ஆஸ்திரேலியாவில் மெல்பேர்னில் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் உலகிலேயே முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து 1856இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றனர். இது தொழிலாளி வர்க்க போராட்டத்தின் மைல் கல்லாக அமைந்தது.

சார் மன்னரின் ஆட்சியின் கீழ் ரஷ்யத் தொழிலாளிகள் பெரும் துன்பங்களுக்கு ஆளானார்கள். இங்கும் 1895 - 1899க்கு இடைப்பட்ட காலத்தில் நூற்றுக்கணக்கான வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. 1896 ஏப்ரல் மாதத்தில் லெனின் மே தினத்திற்காக எழுதிய சிறு பிரசுரத்தில், ரஷ்யத் தொழிலாளிகளின் நிலைமை குறித்து விரிவாக அலசியதோடு, ரஷ்யத் தொழிலாளர்களின் பொருளாதார போராட்டம் - அரசியல் போராட்டமாக எழுச்சிக் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர். தொழிலாளிகளின் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்களே ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர்கள் பேசினார்கள்.

Updated On: 1 May 2024 5:15 PM GMT

Related News