புதுக்கோட்டை நகர போக்குவரத்து காவல்துறை சார்பில் இலவச இருதய பரிசோதனை முகாம்

புதுக்கோட்டை நகர போக்குவரத்து காவல்துறை சார்பில் இலவச இருதய பரிசோதனை முகாம்
X

புதுக்கோட்டையில் காவல்துறை சார்பில் நடைபெற்ற இருதய பரிசோதனை முகாம்

தமிழ்நாடு காவல்துறை பணியாளர்கள் காவலர்கள் அரசு ஊழியர்கள் பொது மக்களும் முகாமில் 250 க்கும் மேற்பட்டோர் பயன் பெற்றனர்

புதுக்கோட்டை நகர போக்குவரத்து காவல்துறை சார்பில் இலவச இருதய பரிசோதனை முகாம் நடைபெற்றது.

புதுக்கோட்டைநகர போக்குவரத்து காவல்துறை திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனை சார்பில் இலவச இருதய பரிசோதனை முகாம் புதுக்கோட்டை ஆயுதப்படை திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முகாமினை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பி. கீதா தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

முகாமில் அப்போலோ இருதய நல சிறப்பு மருத்துவர் டாக்டர் பி விஜய் சேகர் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனை களை வழங்கினார். இதையடுத்து, அனைவருக்கும் ரத்தஅழுத்தம் ரத்தத்தில் சர்க்கரைஅளவு ,கொழுப்பு அளவு இருதய சுருள் படம், இருதய ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன. 100க்கும் மேற்பட்ட சிறு இருதய குறைபாடு உள்ளவர்களுக்கு டாக்டர் பி விஜய் சேகர் ஆலோசனை வழங்கினார். பரிசோதனைக்குப்பின்னர், 25 நபர்களுக்கு மேற்பட்டோர் மேல் சிகிச்சைக் காக திருச்சி அப்போலோ மருந்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

அப்போலோ மருத்துவர்.சுதந்திரகுமார், மார்க்கெட்டிங் நிர்வாகி தனவேந்தன், இந்திய மருத்துவச் சங்க பொருளாளர் டாக்டர் கோபாலகிருஷ்ணன், போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர்கள் புவனேஸ்வரன்,ரவிச்சந்திரன் ஸ்ரீதர் போக்குவரத்து காவலர்கள் ராஜசேகர், உத்தமி, சற்குணன், விஜய் தேன்மொழி, கார்த்திக் மற்றும் ஊர்காவல்படையினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு காவல்துறை பணியாளர்கள் காவலர்கள் அரசு ஊழியர்கள் பொது மக்களும் முகாமில் 250 க்கும் மேற்பட்டோர் பயன் பெற்றனர். முன்னதாக நகர போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் மரிய சாத்தோ திலகராஜ் அனைவரையும் வரவேற்றார். நிறைவாக அப்போலோ சிறப்பு மருத்துவமனை மார்க்கெட்டிங் மேலாளர் அனந்த ராமகிருஷ்ணன் .நன்றியுரை ஆற்றினார் .

Tags

Next Story
வீட்டுக்குள்ள இப்படி நடந்தாலே எடை குறைஞ்சு ஹெல்தியா இருப்பீங்களாமே.. அப்படி என்னதான் பண்ணனும் பாக்கலாமா...?