/* */

பொங்கல்பண்டிகையை கொண்டாட தமிழகம் வரும் பிரதமருக்கு உற்சாகவரவேற்பு:பாஜக தீர்மானம்

நகராட்சி தேர்தலை எதிர்கொள்ள 42 வார்டுகளுக்கும் தலா 12 பேர் கொண்ட பாஜக பூத் கமிட்டி அமைக்கப்பட்டது

HIGHLIGHTS

பொங்கல்பண்டிகையை கொண்டாட தமிழகம் வரும் பிரதமருக்கு உற்சாகவரவேற்பு:பாஜக தீர்மானம்
X

புதுக்கோட்டையில் நடந்த பாஜக நகர செயற்குழு கூட்டத்தில் பாஜக மாவட்டத் தலைவர் ஏவிசிசி கணேசன் பேசுகிறார்

புதுக்கோட்டை நகர பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் நகர தலைவர் சுப்பிரமணியன் தலைமையில்,பாஜக மாவட்ட துணைத் தலைவரும், நகராட்சி தேர்தல் பொறுப்பாளருமான ஏவிசிசி கணேசன் முன்னிலையில் இன்று நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் சிவசாமி கண்டியர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நகரப் பொதுச் செயலாளர் லெட்சுமணன்அனைவரையும் வரவேற்றார்.

நகராட்சி குடிநீர் சப்ளை இல்லாத காலங்களுக்கு, குடிநீர்வரி செலுத்த விலக்களிக்க வேண்டும். நகரில் பரவிவரும் மர்மகாய்ச்சலை தடுக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும்.பால்பண்ணை, சங்கரமடம், அடப்பன்குளம் வழியாக அரசு மருத்துவ கல்லூரிக்கு செல்ல சிறப்பு ஆம்புலன்ஸ் பாதை அமைக்க வேண்டும்.இந்து சமயதிருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்த வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்வது

காசி ஶ்ரீவிஸ்வநாதர் ஆலயத்தை புனரமைத்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பது, தமிழகம் வரவிருக்கும் பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் கூட்டத்தில் முன்னதாக மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத் மறைவிற்கு இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. நகராட்சி தேர்தலை எதிர்கொள்ள 42 வார்டுகளுக்கும் தலா 12 பேர் கொண்ட பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டு, அதற்கான பெயர் பட்டியல்களையும் நகர பாஜக நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் காடுவெட்டி குமார்,மாவட்ட செயலாளர் வீரன்சுப்பையா, ஓபிசி பிரிவு தலைவர் மணிராஜன்,வழக்கறிஞர் பிரிவு தலைவர் சுரேஷ்கண்ணன்,தொழில் பிரிவு தலைவர் சீனிவாசன்,ஊடகபிரிவு தலைவர் சந்துரு, நகர துணைத் தலைவர்கள் ரவிக்குமார்,ரவிச்சந்திரன் |சிவஇளங்கோ,வஜா ராம்தாஸ்,பொருளாளர் ஆனந்த், நகர செயலாளர்கள் கைலாஷ், சுப்பிரமணியன் மற்றும் கிளைத் தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 31 Dec 2021 9:21 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனி சமதர்மபுரம் நாடார் மண்டகப்படி திருவிழா..!
  2. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  3. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  4. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  7. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  8. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  9. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...
  10. வீடியோ
    🔥நீ மேல கை வச்சு பாரு🔥தொண்டர்கள் உச்சகட்ட ஆரவாரம் |🔥Annamalai...