/* */

வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்.

HIGHLIGHTS

வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில்  ஆர்ப்பாட்டம்
X

தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளே உணவு இடைவெளியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட மையம் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளே உணவு இடைவெளியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

இந்த ஆர்ப்பாட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலகில் உள்ள சுமார் 75 அலுவலக உதவியாளர் உள்ளிட்ட அடிப்படை பணியாளர்கள், காலி பணியிடங்களை பதவி உயர்வு மற்றும் நேரடி நியமனம் மூலம் உடனே நிரப்பப்பட வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளில் புதிதாக பணி நியமனம் மற்றும் பதவி உயர்வு வழங்கபடாதவர்கள் தகுதியான பருவ முடிக்கவும், ஆண்டு ஊதிய உயர்வு பெறவும், அரசு அடிப்படை பயிற்சி மற்றும் நில அளவை பயிற்சிகளை உடனே இணையவழி பயிற்சியாக வழங்கிட வேண்டும்.

2021 ஆம் ஆண்டு வட்டாட்சியர் பட்டியில் காலதாமதமின்றி வெளியிடுதல் அல்லது தற்காலிக வட்டாட்சியர் பதவி உயர்வு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்களை எழுப்பினர்.


Updated On: 2 Aug 2021 4:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?