/* */

இயற்கை வளங்கள் பாதுகாப்பு - யோகா கலை முக்கியத்துவம்: நடை பயணம் செல்லும் இளைஞர்

நடை பயணமாக புதுக்கோட்டைக்கு வருகை தந்த மைசூரை சேர்ந்த இளைஞர் கிருஷ்ணாவுக்கு வரவேற்பு

HIGHLIGHTS

இயற்கை வளங்கள் பாதுகாப்பு - யோகா கலை முக்கியத்துவம்: நடை பயணம் செல்லும் இளைஞர்
X

நடை பயணமாக புதுக்கோட்டைக்கு வருகை தந்த மைசூரை சேர்ந்த இளைஞர் கிருஷ்ணாவுக்கு வரவேற்பளித்த பொதுமக்கள்

இயற்கை வளங்களை பாதுகாக்கவும் யோகா கலை முக்கியத்துவத்தை வலியுறுத்தியும் மைசூரை சேர்ந்த கிருஷ்ணா நடை பயணமாக புதுக்கோட்டைக்கு வருகை தந்தவர்க்கு வரவேற்பு இயற்கை வளங்களை பாதுகாப்பதின் அவசியத்தை வலியுறுத்தியும் யோகா முக்கியத்துவத்தை வலியுறுத்தியும் இந்தியா முழுவதும் மைசூரை சேர்ந்த கிருஷ்ணா( 29 ) நடைபயணம் மேற்கொள்கிறார். கன்னியாகுமரி மதுரை திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 9 .12. 2022 அன்று காலை புதுக்கோட்டைக்கு வருகை தந்த அவரை நகரில் சாந்த நாதசுவாமி ஆலயம் முன்பு விஸ்வ இந்து பரிஷத் மாவட்ட செயலாளர் அரங்குளவன் வரவேற்பளித்து நினைவு பரிசு வழங்கி வாழ்த்தினர்.

இந்நிகழ்வில் விஸ்வ இந்து பரிசுத் இணை செயலாளர் எஸ் சுரேஷ், அமைப்பாளர் பி சரவணன், ரோட்டரி தலைவர் பிரகாஷ், நேரு யுவகேந்திரா பொறுப்பாளர் நமச்சிவாயம், சமூக ஆர்வலர் ஞானக்கலைசேகர் மற்றும் யோக கலை பயிற்சியாளர்கள், மாணவர்கள், வர்த்தக பிரமுகர்கள் வாழ்த்தினார்கள். பின்னர் இளைஞர் கிருஷ்ணா கந்தர்வகோட்டை வழியாக தஞ்சாவூருக்கு சென்றார். அவரை அனைவரும் வழி அனுப்பி வைத்தனர்.

நடை பயணம் குறித்து கிருஷ்ணா கூறுகையில், கடந்த அக்டோபர் மாதம் 16ஆம் தேதி மைசூரில் பயணத்தை துவங்கினேன். வழி நெடுகிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு சென்று இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினேன். மூன்று ஆண்டுகள் இந்தியா முழுவதும் 28 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன். என்னுடைய பயணம் முழுவதும் நடந்தே செல்ல முடிவு செய்துள்ளேன். தினமும் அதிகாலை 6:00 மணிக்கு என்னுடைய பயணத்தை துவங்கி பன்னிரண்டு மணி வரையிலும் பின்னர் மாலை 4 மணி துவங்கி இரவு வரையிலும் நடந்து வருகிறேன் சமூகஆர்வலர்கள் பலர் என்னை வரவேற்று வாழ்த்தி வழியனுப்பி வைக்கின்றனர் என்றார்

Updated On: 9 Dec 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  3. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  4. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  6. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  7. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...