/* */

தானாகவே காரை ஓட்டிச்சென்ற பாஜக நிர்வாகி கௌதமி: பாஜக நிர்வாகிகள் வியப்பு

தானாகவே காரை ஓட்டிச்சென்ற பாஜக நிர்வாகி கௌதமி:  பாஜக நிர்வாகிகள் வியப்பு
X

 கார் ஓட்டி அசத்திய பாஜக நிர்வாகி கௌதமியை வியப்புடன்  பார்த்த பாஜக நிர்வாகிகள்.

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியை பொது மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதத்தில் தமிழகத்தில் பாஜகவில் சினிமா நடிகை மற்றும் நடிகர்களை இணைக்கும் முயற்சியில் தமிழக பாஜக பல்வேறு கட்ட முயற்சி எடுத்து வருகிறது.

அதன்படி சினிமா நடிகை காயத்ரி ரகுராம், கௌதமி, குஷ்பு உள்ளிட்ட பிரபலமான நடிகைகளை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.மேலும் தமிழகம் முழுவதும் நடிகைகள் பாரதிய ஜனதா கட்சியை ஆதரித்து பொதுமக்களிடம் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பாரதிய ஜனதா கட்சி மாற்றும் பிரதமர் மோடி செய்து வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கும் விதத்தில் பல்வேறு கட்ட பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் பாஜக நிர்வாகியும் திரைப்பட நடிகையுமான கௌதமி புதுக்கோட்டைக்கு வருகை தந்து மச்சுவாடி பகுதியில் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு நடந்து செல்லும் பக்தர்களுக்கு குளிர்பானம் வழங்கி நடை பயணத்தை துவக்கி வைத்தார். பின்னர் தன்னுடைய காரில் ஏறி அனைவருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு சீட் பெல்ட் அணிந்துகொண்டு சொகுசு காரை தானே ஓட்டிச் சென்ற கௌதமி சாலையில் செல்லும் போது கண்ணாடியை இறக்கிவிட்டு பாஜக நிர்வாகிகளுக்கு டாட்டா காட்டிவிட்டு காரை ஓட்டிச் சென்றது பாஜக நிர்வாகிகளை வியப்பில் ஆழ்த்தியது. ஒரு பிரபல நடிகை பாஜக நிர்வாகி ஓட்டுநர் வைத்துக் கொள்ளாமல் தைரியமாக சொகுசு காரை தானாகவே ஓட்டிச் செல்கிறார் என்று பாஜக நிர்வாகிகள் பேசிக்கொண்டனர்.

Updated On: 22 April 2022 8:10 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனி சமதர்மபுரம் நாடார் மண்டகப்படி திருவிழா..!
  2. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  3. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  4. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  7. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  8. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  9. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...
  10. வீடியோ
    🔥நீ மேல கை வச்சு பாரு🔥தொண்டர்கள் உச்சகட்ட ஆரவாரம் |🔥Annamalai...