/* */

ஆவின் பால் கொள்முதல் நிலையத்தில் எம்எல்ஏ ஆய்வு

புதுக்கோட்டை ஆவின் கொள்முதல் நிலையத்தை எம்எல்ஏ முததுராஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

ஆவின் பால் கொள்முதல் நிலையத்தில்  எம்எல்ஏ  ஆய்வு
X

திருவப்பூர் அருகே உள்ள ஆவின் பால் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்து ராஜா ஆவின் பால் சேமித்து வைக்கக்கூடிய சேகரிப்பு தொட்டி, பால் சம்பந்தப்பட்ட மற்ற தயாரிப்பு பகுதிகள், பரிசோதனை நிலையம், அலுவலகம் ஆகியவற்றை பார்வையிட்டு பொது மேலாளரிடம் விளக்கம் கேட்டரிந்தார்.

மேலும் அதன் கொள்ளளவு, அங்குள்ள இயந்திரங்களின் நிலைகள், பணியாளர்கள் விவரங்கள், அவர்களின் குறை நிறைகள் ஆகிவற்றை கேட்டறிந்து உற்பத்தியை பெருக்குவதற்குண்டான நடவடிக்கைகளை விரைந்து செய்யுமாறு ஆலோசனை வழங்கினார். ஆய்வின் போது ஆவின் பால் கொள்முதல் நிலைய அலுவலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Updated On: 16 May 2021 1:15 PM GMT

Related News