/* */

மக்காச்சோளப் பயிரில் படைப்புழுத் தாக்குதலைக் கட்டுப்படுத்த வேளாண்துறை தகவல்

மக்காச்சோளப் படைப்புழுவின் முட்டை குவியல்கள் மற்றும் புழுக்களை சேகரித்து அழிக்க வேண்டும்.

HIGHLIGHTS

மக்காச்சோளப் பயிரில் படைப்புழுத் தாக்குதலைக் கட்டுப்படுத்த வேளாண்துறை தகவல்
X

பைல்படம்

மக்காச்சோளப் பயிரில் படைப்புழுத் தாக்குதலைக் கட்டுப்படுத்திட வேளாண்துறை ஆலோசனை தெரிவித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்காச்சோளப் பயிரினைத் தாக்கும் படைப்புழுவினை ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளைப் பயன்படுத்தி கட்டுப்படுத்திட வேண்டுமென வேளாண்மை இணை இயக்குநர்(பொ) மெ.சக்திவேல் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

விவசாயிகள், மக்காச்சோளப் பயிரில் படைப்புழுத் தாக்குதலை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தவில்லையெனில் புழுவின் தாக்குதல் தீவிரமாகிப் பயிர்ச் சேதம் மற்றும் மகசூல் இழப்பு ஏற்பட்டு விவசாயிகளுக்குப் பொருளாதார இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, விவசாயிகள் பரிந்துரையின்படி ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளைப் பயன்படுத்தி கட்டுப்படுத்திட கேட்டுகொள்ளப்படுகிறது.

தாக்குதலின் அறிகுறிகள்:தாய் அந்துப்பூச்சியானது முட்டை குவியல்களைப் பெரும்பாலும் இலையின் அடிப்பகுதியில் இடுகின்றன. முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள் இலையின் அடிப்பகுதியினைச் சுரண்டித் தின்றுச் சேதத்தை விளைவிக்கும். இதனால் இலைகள் பச்சையத்தை இழந்து வெண்மையாகக் காணப்படும். இரவு நேரங்களில் அதிகச் சேதத்தை விளைவிக்கக் கூடியது.

மூன்றாம் நிலையிலிருந்து ஆறாம் நிலை வரையிலான புழுக்கள் இலையுறையினுள் சென்று பாதிப்பை உண்டாக்கும். இதனால் இலைகள் விரிவடையும் நிலையில் வரிசையாகத் துளைகள் காணப்படும். மேலும், வளர்ந்த புழுக்கள் தண்டுப் பகுதிகளையும், மக்காச்சோளப் பயிரின் அடிப்பகுதியையும், நுனிப்பகுதியையும் தின்று சேதம் விளைவிக்கும்.

ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு: மக்காச்சோளப் படைப்புழுவின் முட்டை குவியல்கள் மற்றும் புழுக்களை சேகரித்து அழிக்க வேண்டும். கோடை உழவு செய்து மண்ணிலுள்ள கூட்டுப் புழுக்களை அழிக்கலாம். ஒரே தொகுப்பாக ஒரே சமயத்தில் மக்காச்சோளத்தை விதைப்பதன் மூலம் படைப்புழு தாக்குதலை குறைக்கலாம்.

உளுந்து மற்றும் பாசிப்பயறு போன்ற பயறுவகைப் பயிர்களை ஊடுபயிர் சாகுபடி செய்ய வேண்டும்.ஒரு ஏக்கருக்கு 10 எண்கள் பறவை தாங்கிகள் வைப்பதன் மூலம் விதைத்தது முதல் 30 நாட்கள் வரை மக்காச்சோள படைப்புழுக்களை கட்டுப்படுத்தலாம்.மூன்று அல்லது நான்கு வரிசைகள் மக்காச்சோள வயல்களை சுற்றி வரப்பு பயிராக நேப்பியர் போன்ற பொறிப் பயிர்களை வளர்ப்பதன் மூலம் ஆரம்ப நிலையில் மக்காச்சோள படைப்புழுக்களை கட்டுப்படுத்தலாம்.

விதைத்தது முதல் 30 நாட்கள் பயிர்களில் மக்காச்சோள படைப்புழு தென்பட்டவுடன் மணல் மற்றும் சுண்ணாம்பு ஆகியவற்றை 9:1 என்ற விகிதத்தில் கலந்து இலை உறைக்குள் இடுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.ஒரு ஏக்கருக்கு 15 எண்கள் இனக்கவர்ச்சிப் பொறி வைத்து ஆண்அந்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.

முட்டை ஒட்டுண்ணிகளான டிரைக்கோகிரம்மா பிரடியோசம் அல்லது டெலினோமஸ் ரேமுஸ் ஒரு ஏக்கருக்கு 50000 எண்கள், ஒரு வார இடைவெளியில் வெளியிடுவதன் மூலம் மக்காச்சோள படைப்புழுவின் முட்டைகளை அழிக்கலாம். பூச்சிகளை தாக்கும் பூஞ்சானங்களான மெட்டாரைசியம் அனிசோபிளே, பேவேரியா பேசியானா இதில் ஏதாவது ஒன்றை லிட்டருக்கு 5 கிராம் என்ற அளவில் 10 நாட்கள் இடைவெளியில் இலை உறைக்குள் நன்கு படுமாறு தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

இயற்கை ஒட்டுண்ணிகள் மற்றும் இரை விழுங்கிகள் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காகத் தட்டைப்பயறு, சூரியகாந்தி, எள் போன்ற பயிர்களை வரப்புப் பயிராகப் பயிரிட வேண்டும். கடைசி உழவின்போது ஒரு ஏக்கருக்கு 100 கிலோ கிராம் வேப்பம் பிண்ணாக்கு இட வேண்டும். ஒரு கிலோ கிராம் விதைக்கு நுண்ணுயிர்ப் பூச்சிக்கொல்லியான பெவேரியா பேசியானா அல்லது தையோமீத்தாக்சம் மருந்தினை 10 கிராம் இவற்றில் ஏதேனும் ஒன்றைக் கொண்டு விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். மக்காச்சோளத்திற்குப் பிறகு மீண்டும் மக்காச்சோளம் பயிரிடுவதைத் தவிர்த்து பிற பயிர்களான பயறுவகைப் பயிர்கள், எண்ணெய்வித்துப் பயிர்கள் ஆகியவற்றைப் பயிரிட்டுப் பயிர்ச் சுழற்சியைப் பின்பற்ற வேண்டும்.

பூச்சி மருந்து தெளித்தல்: படைப்புழுவின் தாக்குதல் அதிகரிக்கும்பொழுது 15 முதல் 20 நாட்களில், அசாடிராக்டின் ஒரு சதவீத இ.சி. 400 மி.லி. அளவு அல்லது இமாமெக்டின் பென்;சோயெட் 5 எஸ்.ஜி. 80 கிராம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம். மக்காச்சோளப் பயிரானது 40-45 நாட்கள் வளர்ந்த நிலையில், ஸ்பெனிடோரம் 12 எஸ்.சி 100 மி.லி அல்லது நவ்லுரான் 10 இ.சி என்ற மருந்து 300 மி.லி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம்.

மேலும் இப்பூச்சியின் தாக்குதல் 60 முதல் 65 நாட்கள் வளர்ந்த பயிரில் தென்பட்டால் புளுபென்டையமைடு 480 எஸ்.சி. 80 மி.லி. அல்லது குளோரோன்டிரிபுரோல் 18.5 எஸ்.சி. 80 மி.லி. ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை 200 லிட்டர் நீரில் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம். இவ்வாறு ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடித்து மக்காச்சோளப்படைப்புழுவினைக் கட்டுப்படுத்திடலாம் எனவும், மேலும் கூடுதல் விவரங்களுக்குத் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தினைத் தொடர்பு கொள்ளலாம் என ஆலோசனை தெரிவித்துள்ளார்.

Updated On: 21 Oct 2022 2:38 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  4. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  6. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  7. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  9. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  10. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்