/* */

நெல் சாகுபடியில் பூச்சி, நோய் தாக்குதல்களை கட்டுப்படுத்த வேளாண் துறை ஆலோசனை

தற்பொழுது நிலவும் தட்பவெப்ப நிலை காரணமாக சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிரில் பூச்சி நோய் தாக்குதல் காணப்படுகிறது

HIGHLIGHTS

நெல் சாகுபடியில் பூச்சி, நோய் தாக்குதல்களை கட்டுப்படுத்த வேளாண் துறை  ஆலோசனை
X

நெற்பயிரைத்தாக்கும் பூச்சி

தற்பொழுது நிலவும் தட்பவெப்ப நிலை காரணமாக சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிரில் இலைச்சுருட்டுப்புழு,தண்டுதுளைப்பான்,புகையான்,குலைநோய் மற்றும் பாக்டீரியா இலைக்கருகல் ஆகியவற்றின் தாக்குதல் ஆங்காங்கே காணப்படுகிறது. இதனை விவசாயிகள்; கட்டுப்படுத்திட பின் வரும் ஆலோசனைகளைக் கடைப்பிடிக்கலாம்

இலைச்சுருட்டுபுழு: இலைச்சுருட்டுபுழுக்கள் நெற்பயிரின் இலைகளை ஒன்றிணைத்துக் கொண்டு அவற்றிலுள்ள பச்சையத்தைச் சுரண்டி உண்பதால் இலைகளில் வெள்ளை வெள்ளையாகக் காணப்படும். இவ்வாறுபச்சையம் முழுவதும் சுரண்டப்பட்டநிலையில் பயிர் எரிந்ததுபோல் காணப்படும். இதன் தாக்குதல் வயல் ஓரங்களில் நிழலானபகுதிகளிலும் அதிகமாகஉரம் இடப்பட்டபகுதிகளிலும் மிகுந்துகாணப்படும்.

இதனைகட்டுப்படுத்திடஏக்கருக்குகுளோர்பைரிபாஸ் 20 ஈசி 750 மி.லி. ,குளோரான்டிரானிலிபுரோல் 24 எஸ்.சி 40 மி.லி. வரை,புளுபென்டையமைடு 39.45 ஈசி 40 மி.லி. வரை,பிப்ரோனில் 80 டபுள்யூஜி 25 கிராம் வரை இவற்றுள் ஏதேனும் ஒருமருந்தினை 200 லிட்டர் நீரில் கலந்துதெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

தண்டுதுளைப்பான்: குருத்துப்பூச்சிஎனப்படும் தண்டுதுளைப்பானின் தாக்குதலால் இளம்பயிரில் நடுக்குருத்துவாடிக் காய்ந்துவிடும். கதிர் பிடிக்கும் தருணத்தில் தாக்குதல் ஏற்படின் மணிபால் பிடிக்காமல் சாவியாகி வெண் கதிர்களாக மாறி மகசூல் பாதிப்படைகிறது. இதன் தாக்குதலைக் கட்டுப்படுத்திட நாற்றுகளை நெருக்கமாக நடுவதைத் தவிர்த்து தேவையான தழைச்சத்தினை மூன்று அல்லது நான்கு தடவையாகப் பிரித்து இடுதல் வேண்டும்.

இதனைகட்டுப்படுத்திடஏக்கருக்குகுளோரான்டிரானிலிபுரோல் 24 எஸ்.சி 40 மி.லி.,கார்டாப் iஹட்ரோகுளோரைடு 50 சத எஸ்.பி400 கிராம் இவற்றுள் ஏதேனும் ஒருமருந்தினைஒருஏக்கருக்கு 200 லிட்டர் நீரில் கலந்துதெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

புகையான்: புகையான் என்பதுஒருதத்துப்பூச்சி. சாம்பல் நிறத்தில் இருக்கும். கண்ணாடிபோன்றசிறிய இறக்கைகளைக் கொண்டிருக்கும். இப்பூச்சியானதுநெற்பயிரின் தூர்களில் இருந்துகொண்டுநெற்பயிரின் சாற்றைஉறிஞ்சுகிறது. இதனால் பயிர்கள் வட்டவடிவில் திட்டுத்திட்டாகக் காயத் தொடங்கும். பின்னர் எரிந்துபுகைந்தாற் போல் காணப்படும். மணிகளில் பால் பிடிப்பதற்குமுன்பாகவேகாய்ந்துவிடுவதால் மணிகள் முற்றாமல் பதராகிவிடும். வயல்களில் நீர் தேங்கியுள்ள இடங்களிலும்,வானம் மேகமூட்டத்துடன் இருக்கும்போதும் இதன் பாதிப்புஅதிகமாகும். மேலும்,நெருக்கி நடப்பட்ட வயல்களிலும், தழைச்சத்து அதிகமாக இடப்பட்ட வயல்களிலும் இதன் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

வயலில் நீர் மறைய நீர் கட்டவேண்டும். மேலும்,யூரியா போன்ற தழைச்சத்து உரங்களை மேலுரமாக இடும்பொழுது பிரித்துப் பிரித்து இட வேண்டும். மேலும் புகையானின் தாக்குதல் அதிகமாகும்பொழுது ஏக்கருக்கு புப்ரோபெசின் 25 எஸ்.சி. 300 மி.லி.அல்லதுதையோ மீத்தாக்சம் 25 டபிள்யு.ஜி. 40 கிராம் இவற்றில் ஏதேனும் ஒன்றை 200 லிட்டர் நீரில் கலந்துநெற்பயிரின் தூர்ப் பகுதியில் நன்குபடும்படி தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

குலைநோயின் அறிகுறிகள்: நாற்றங்காலில் தொடங்கிஅனைத்து வளர்ச்சிப் பருவங்களிலும் குலைநோய் நெற்பயிரைத் தாக்குகிறது. இலைகளின் மேல் பழுப்பு நிறத்தில் சாம்பல் நிறமையப் பகுதியுடனும் காய்ந்த ஓரங்களுடன்கூடிய கண்வடிவப் புள்ளிகள் காணப்படும். பலபுள்ளிகள் ஒன்றுசேர்ந்து பெரிய ஒழுங்கற்ற திட்டுக்களை உருவாக்கும்.இந்நோய் தீவிரமாகத் தாக்கும் போது பயிர் முழுவதும் எரிந்தது போன்று தோற்றமளிப்பதால் குலைநோய் எனப்படுகிறது.

இதனை கட்டுப்படுத்திட ஏக்கருக்கு டிரைசைக்ளோசோல் 75 டபிள்யு.பி. என்றமருந்து 120 கிராம் அல்லது அசோஸ்க்சிட்ரோபின் 23 எஸ்.சி. என்றமருந்து 200 மி.லி. இதில் ஏதேனும் ஒன்றை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் நீரில் கலந்துதெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

பாக்டீரியா இலைக்கருகல்: பொதுவாக இரவில் நிலவும் குளிர்ச்சி மற்றும் காற்றிலுள்ள அதிக ஈரப்பதம் காரணமாக பாக்டீரியா இலைக்கருகல் நோயானது ஆரம்பத்தில், இலையின் ஓரத்தில் வட்ட வடிவ மஞ்சள் நிறப் புள்ளிகள் தோன்றும்.அவைகள் இணைந்து அளவில் பெரியதாகி, இலை முழுவதும் மஞ்சள் நிறமாக வைக்கோல் போன்று பழுப்புநிறக் காய்ந்த கோடுகளாகக் காட்சியளிக்கும். தாக்குதல் அதிகமானால் இலை முழுவதும் காய்ந்துவிடும்.

நோயின் அறிகுறிகள் தென்பட்டவுடன் ஒருஏக்கருக்கு 40 கிலோ பசுஞ்சாணத்தை 100 லிட்டர் நீரில் நன்கு கலக்கி இரவு முழுவதும் ஊறவைத்து,மறுநாள் காலையில் அதனை வடிகட்டிப் பெறப்படும் தெளிந்த கரைசலுடன் 100 லிட்டர் நீரைக் கலந்துகைத் தெளிப்பான் கொண்டு காலை நேரத்தில் தெளிக்க வேண்டும்.மேலும்,தாக்குதல் அதிகமாகக் காணப்படின் காப்பர் ஆக்சிகுளோரைடு 500 கிராம் மற்றும் ஸ்டெரெப்டோமைசின் சல்பேட் மற்றும் டெட்ராசைக்ளின் கலவை 120 கிராம் ஆகியமருந்துக் கலவையினை 200 லிட்டர் நீரில் கலந்து காலை அல்லது மாலை வேளையில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம். இவ்வாறு புதுக்கோட்டை வேளாண்துறை இணை இயக்குநர் மா.பெரியசாமி ஆலோசனை தெரிவித்துள்ளார்.

Updated On: 10 Dec 2022 10:15 AM GMT

Related News