/* */

குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்

ஏலத்தில் பங்கேற்பவர்கள் இருசக்கர வாகனத்துக்கு ரூ.5,000, 4 சக்கரவாகனத்துக்கு ரூ.10,000 வைப்புத்தொகை செலுத்த வேண்டும்

HIGHLIGHTS

குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்
X

பெரம்பலூர் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம்விடத்தயாராக உள்ள வாகனங்கள்

பெரம்பலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட 44 இருசக்கர வாகனங்கள், 1 மூன்று சக்கர வாகனம் (ஆட்டோ) மற்றும் 4 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 49 வாகனங்கள் 8.09.2021 அன்று காலை 11 மணி முதல் ஆயுதப்படை வளாகத்தில், பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதுவிலக்கு ஆகியோர் முன்னிலையில் பொது ஏலத்தில் விடப்பட உள்ளது.

பெரம்பலூர், அரியலூ,ர் திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களும், பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் ஏலத்தில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதுவிலக்கு அமல்பிரிவு பெரம்பலூர் மாவட்ட அலுவலகத்தில் நேரிலோ அல்லது 04328 225 023 மற்றும் 94981 49123 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம். ஏலத்தில் கலந்து கொள்பவர்கள், இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூ.5,000மும், நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.10,000மும் வைப்புத் தொகை செலுத்தி, தங்களது பெயர் மற்றும் முகவரியை பதிவு செய்து கொள்ள வேண்டும். ஏலத்தில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு அடையாள எண் கொண்ட வில்லை வழங்கப்படும். பதிவு செய்து கொண்டவர் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.

ஏலம் எடுப்பவரைத்தவிர பிறருக்கு அனுமதி இல்லை. வாகனத்தை அதிகபட்ச விலைக்கு ஏலத்தில் எடுத்தவர் ஏலத்தொகையுடன் GST சேர்த்து பிற்பகல் 3 மணிக்குள் உரிய அலுவலரிடம் செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். காப்பீட்டு தொகை கழித்துக் கொள்ளப்படும். வாகனத்தை ஏலம் எடுத்தவர், உரிய தொகையை செலுத்த தவறினால் காப்பீட்டு தொகை திருப்பித் தரப்படமாட்டாது. ஏலம் ரூ.100ன் மடங்கில் கேட்கப்பட வேண்டும்.

வாகனத்துடன் வாகனம் ஏலத்தில் எடுத்ததற்கான சான்று மட்டுமே வழங்கப்படும். வாகனத்தின் பதிவு சான்று வழங்க இயலாது. ஏல நடவடிக்கைகள் அனைத்தும் ஏலக்குழு அலுவலர்களால் முடிவு செய்யப்படும். பொது ஏலத்தில் காவல் துறை சார்ந்த எவரும் கலந்து கொள்ள அனுமதி இல்லை. வாகனங்களை 07.09.2021 அன்று பகல் 12 மணி முதல் பார்வையிடலாம். ஏலத்தில் கலந்து கொள்ள வருபவர்கள், தங்களது ஆதார் அடையாள அட்டையை தவறாமல் கொண்டு வர வேண்டும் என கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுஜாதா தகவல் தெரிவித்துள்ளார்.

Updated On: 2 Sep 2021 3:47 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு