/* */

பெரம்பலூர்: பட்டா திருத்த முகாமில் 40 மனுக்களுக்கு உடனடி தீர்வு

பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த பட்டா திருத்த சிறப்பு முகாமில் 40 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

HIGHLIGHTS

பெரம்பலூர்: பட்டா திருத்த முகாமில்  40 மனுக்களுக்கு உடனடி தீர்வு
X

பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த பட்டா திருத்த சிறப்பு முகாமில் திருத்தம் செய்யப்பட்ட பட்டாக்களை கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா பயனாளிகளுக்கு வழங்கினார்.

வருவாய்த்துறை அமைச்சர் கடந்த 31.08.2021 அன்று சட்டப்பேரவையில் "விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் கிராம அளவில் சிறப்பு முகாம்கள் நடத்துதல், அரசின் சேவைகளை பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு செல்லும் இவ்வரசின் கொள்கையின் ஒரு அங்கமாக ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும், விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். ஒவ்வொரு வருவாய் வட்டத்திலும் இந்த முகாம்கள் நடத்தப்பட்டு 2022 பொங்கல் திருநாளுக்குள் அனைத்து கிராம மக்களும் பயன்பெற வழிவகை செய்யப்படும்" என்ற அறிவிப்பிற்கிணங்க சிறப்பு முகாம்கள் நடத்திட அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் இணையவழி தமிழ்நிலம் மென்பொருள் பதிவுகளில் ஏற்பட்ட எளிய பிழைகளை திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் பெரம்பலூர் வட்டத்தில் எளம்பலூர் கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு எளம்பலூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் 47 மனுக்கள் பெறப்பட்டு 5 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு வழங்கப்பட்டது.

வேப்பந்தட்டை வட்டத்தில், மலையாளப்பட்டி, அரும்பாவூர் கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு அரும்பாவூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் 42 மனுக்கள் பெறப்பட்டு 15 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு வழங்கப்பட்டது. குன்னம் வட்டத்தில் ஒகளுர் (கி), ஒகளுர்(மே), சு.ஆடுதுறை கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு சு.ஆடுதுறை ராஜிவ்காந்தி சேவாகேந்திரியா மையத்தில் நடைபெற்ற முகாமில் 23 மனுக்கள் பெறப்பட்டு 6 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு வழங்கப்பட்டது.

ஆலத்தூர் வட்டம், நாட்டார்மங்கலம், மாவிலங்கை, செட்டிக்குளம் கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு செட்டிக்குளம் ஆத்திநாட்டார் அன்னதான மண்டபத்தில் நடைபெற்ற முகாமில் 61 மனுக்கள் பெறப்பட்டு 14 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு வழங்கப்பட்டது. ஆக மொத்தம் பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான சிறப்பு முகாமில் 173 மனுக்கள் பெறப்பட்டு, 40 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 133 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் உதவி ஆணையர் (கலால்) ஷோபா ஆலத்தூர் வட்டாட்சியர் முத்துகுமரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 13 Nov 2021 10:23 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  4. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  6. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  7. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  8. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  9. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  10. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...