/* */

கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு பூஸ்ட்டர் தடுப்பூசி போடும் திட்டம் இல்லை

தமிழகத்தில் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு பூஸ்ட்டர் தடுப்பூசி போடும் திட்டம் தற்போது இல்லை என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

HIGHLIGHTS

கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு பூஸ்ட்டர் தடுப்பூசி போடும் திட்டம் இல்லை
X

பெரம்பலூர் மாவட்டத்தில் தடுப்பூசி போடும் திட்டத்தை அமைச்சர் சுப்ரமணியன் ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.முதலில் மேலமாத்தூர் ஆரம்பசுகாதார நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கிவைத்தார்.

பின்னர் பேரளி கிராமத்தில் சி.எஸ்.ஆர் திட்டத்தின் கீழ் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை சார்பில் தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் மா.சுப்ரமணியன்,மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கே சென்று மருந்துகளை வழங்கினார்.

அதைத்தொடர்ந்து பெரம்பலூர் அரசு தலைமை மருத்தவமனையில் மகப்பேறு பிரிவு,குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை பிரிவு,புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட விபத்துகால அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்ரமணியன்,தமிழகத்தில் இரண்டு கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு பூஸ்ட்டர் தடுப்பூசி போடும் திட்டம் தற்போது இல்லை என்றும் அனைவருக்கும் இரண்டு தடுப்பூசி போட்ட பிறகு பூஸ்ட்டர் பற்றி பார்க்கலாம் என்றும் தெரிவித்தார்.மேலும்

தடுப்பூசி கமிட்டி அறிவித்த பிறகே தடுப்பூசி மாற்றி போடுவது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கும் என தெரிவித்த அவர் தமிழகத்தின் கொரோனா தொற்று 1.2சதவிகிதம் என இருக்கும் போது பெரம்பலூர் மாவட்டத்தில் தொற்று சதவிகிதம் 0.75 என கட்டுக்குள்இருக்கிறது என குறிப்பிட்டார்.

தனியார் தொழில் நிறுவனங்கள் பங்களிப்புடன் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக போடப்படும் சி.எஸ்.ஆர் தடுப்பூசி திட்டம் இந்தியாவிலேயே தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என தெரிவித்த மா.சுப்ரமணியன்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் மட்டும் சி.எஸ்.ஆர் திட்டத்தின் கீழ் 1 லட்சத்து 5 ஆயிரம் தடுப்பூசிகள் 8 கோடி ரூபாய் செலவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அவர் சுகாதாரத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிபவர்கள் அனைவரையும் உடனடியாக நிரந்தரம் செய்வதற்கு இது ஒன்றும் ஜீபூம்பா வேலை இல்லை என தெரிவித்தார்.

பெரம்பலூர் மாவட்டத்திற்கு அரசு மருத்துவக்கல்லூரிக்கு இடம் ஒதுக்கப்பட்டு அறிவிப்பு வெளியிட்டும் 10 ஆண்டுகாலமாக அரசியல் காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்த அமைச்சர் மா.சுப்ரமணியன்

பெரம்பலூர் அரசு மருத்துக்கல்லூரி திட்டம் தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

இந்த ஆய்வு மற்றும் பேட்டியின் போது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்,தேசிய சுகாதார திட்டஇயக்குனர் தரேஸ்அகமது

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடப்ரியா,,பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Updated On: 11 Aug 2021 12:35 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  4. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  6. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  8. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  10. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!