/* */

திருநங்கைகளுக்கு சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம்

திருநங்கைகள் தங்களது மனவலிமையினை வளர்க்கும் சிந்தனையோடு கல்வியினை கற்றுக் கொள்ள வேண்டும் என நீதிபதி லதா தெரிவித்தார்.

HIGHLIGHTS

திருநங்கைகளுக்கு சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம்
X

பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் மூலம் திருநங்கைளுக்கான நிவாரண மற்றும் அடையாள அட்டைகளை நீதிபதி லதா திருநங்கைகளுக்கு வழங்கினார்.

பெரம்பலூரில் திருநங்கைகளுக்கு சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி லதா தலைமை வகித்தார் . மாவட்ட சமூக நல அலுவலகத்தின் மூலம் திருநங்கைளுக்கான நிவாரணம் மற்றும் அடையாள அட்டைகளை நீதிபதி லதா வழங்கி, திருநங்கைகளுக்கான உரிமைகள் மற்றும் அவசியத்தினை எடுத்துரைத்தார் .

மேலும் திருநங்கைகள் தங்களது மனவலிமையினை வளர்க்கும் தன்னம்பிக்கை சிந்தனையோடு கல்வியினை திறம்பட கற்றுக் கொள்ள வேண்டும். திருநங்கைகள் வேலைவாய்ப்பினை தேடும் நிலையிலிருந்து மாற்றம் பெற்று தொழில் முனைவோராக தங்களை உருமாற்றி வேலையை வழங்கும் நிலையை அடைய வேண்டும். இன்றைய காலத்திற்கு ஏற்றவாறு தொழிநுட்பங்களை கற்று சமூக ஊடகங்கள் போன்ற இணைய வழியின் மூலமாக தங்களின் திறமைகள் அனைவரும் அறியும் வண்ணம் இணைத்து செயல்பட வேண்டும் .

மேலும் திருநங்கைகளிடம் கலந்துரையாடல் மூலம் அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார். இந்நிகழ்வில் பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலர்கள், ஆல் தி சில்ட்ரன் தொண்டு நிறுவனத்தின் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் முரளீஸ்வரன், சிவம் அறக்கட்டளையின் இயக்குநர் சிற்றம்பலம் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள் கலந்து கொண்டனர் .

Updated On: 29 July 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...