/* */

கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்

பெரம்பலூரில் உள்ள 90 துணை சுகாதார நிலையங்களிலும் கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.

HIGHLIGHTS

கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா  சிறப்பு தடுப்பூசி முகாம்
X

மாதிரி படம்.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை மிக வேகமாக பரவி மக்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக தமிழ்நாட்டில் இரண்டாம் அலை தாக்கம் அதிகமாக இருந்தது. கொரோனா நோயிலிருந்து அனைவரையும் பாதுகாக்கும் பொருட்டு 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இரண்டு தவணைகள் வழங்கப்பட்டு வருகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 1,74,481 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கர்ப்பிணி தாய்மார்களையும், பாலூட்டும் தாய்மார்களையும் பெருந்தொற்றிலிருந்து காப்பதற்காக தடுப்பூசி செலுத்தும் திட்ட செயல்படுதுத்தப்பட்டு வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 3,332 கர்ப்பிணி தாய்மார்களுக்கும், 1488 பாலூட்டும் தாய்மார்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நேற்று ஒருநாளில் மட்டும் 90 இடங்களில் கிராம சுகாதார குழுக்கூட்டம் நடத்தி அதில் 193 கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இனிவரும் நாட்களில் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மாவட்டத்திலுள்ள 90 துணை சுகாதார நிலையங்களிலும் கர்ப்பிணி, பிரசவித்த தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரையும் கொரோனா தடுப்பூசி செலுத்த ஊக்குவித்தல் மற்றும் செலுத்துதல் போன்ற சேவைகள் மக்களுக்கு வழங்கப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் தங்களது பகுதிக்குட்பட்ட துணை சுகாதார மையங்களை அணுகி அங்கு வழங்கப்படும் சேவைகளை பெற்று பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.

Updated On: 31 July 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடைக் காலத்துல ஈஸியா எடையை குறைக்கலாம்! எப்படி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    வீரர்கள் சாப்பிடும் ஊட்டச்சத்து மிக்க உணவுகள் எவை தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    ‘மாற்றம் ஒன்றே மாறாதது’ - மாற்ற முடியாத மாற்றங்களை (ஏ)மாற்றமின்றி...
  4. லைஃப்ஸ்டைல்
    உங்க குழந்தைக்கு இதெல்லாம் குடுங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    உங்க குழந்தையோட நோய் எதிர்ப்பு சக்தி!
  6. வீடியோ
    🔴LIVE : BJP Tamilnadu State President K.Annamalai | Press Meet...
  7. கோவை மாநகர்
    கோடநாடு வழக்கு தொடர்பாக 4 பேரிடம் சிபிசிஐடி விசாரணை
  8. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  9. நாமக்கல்
    கோவை பில்லூர் அணையை உடனடியாக தூர்வார வேண்டும்: கொங்கு ஈஸ்வரன்...
  10. நாமக்கல்
    ஸ்ரீ கண்ணனூர் புது மாரியம்மன் திருவிழா; பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தி...