/* */

பெரம்பலூரில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா

பெரம்பலூரில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் பிறந்த நாள் விழா கோலாகலமாக நடடைபெற்றது.

HIGHLIGHTS

பெரம்பலூரில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா
X

பெரம்பலூர் அம்மாபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி மேஜை, நாற்காலிகளை தேமுதிகவினர் வழங்கினார்.

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனர் தலைவர் கேப்டன் விஜயகாந்தின் பிறந்த நாள் விழா, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தேமுதிக கட்சி சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில்,பெரம்பலூர் மாவட்டம் ,அம்மாபாளையம் கிராமத்தில் இன்று தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மாவட்ட செயலாளர் துரை காமராஜ் தலைமையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் ஒன்றியக் கவுன்சிலர் பாப்பாத்தி செல்வகுமார் , மற்றும் மாவட்ட பொறியாளர் அணி துணைச் செயலாளர் ஆனந்தராஜ் ஆகியோர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு வரும் பயனாளிகள் அமர்வதற்காக நாற்காலி, மேஜை, மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கும், முதியோர்களுக்கு பிரட், முகக் கவசங்கள் வழங்கினார்கள். அரசு மருத்துவமனை சுற்றி ஐந்து தென்னை மரக் கன்று நட்டு வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து, பள்ளி மாணவர்களுக்கு பென்சில், நோட்டு புத்தகம், வழங்கப்பட்டன.இறுதியாக அம்மாபாளையம் பேருந்து நிலையத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி னர்.

அங்கு இருந்த மக்களுக்கு முககவசம் வழங்கி, கொரோனோ தொற்று மூன்றாவது 'அலையில் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் தேமுதிக கட்சி நிர்வாகிகள் கண்ணுசாமி, திருப்பதிசாமி, வேல்முருகன், சந்திரசேகர் ,சத்தியமூர்த்தி, அருண்குமார் , குணசுந்தரி, நல்லுசாமி , ரமேஷ் ,கபாலி, ஈஸ்வரன் , பிரபாகரன் , பழனி முருகன் ,.செந்தில்குமார், மற்றும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்..

Updated On: 25 Aug 2021 7:41 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  4. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  5. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  7. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  8. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  10. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்