/* */

நாமக்கல் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அளவிலான செஸ் போட்டிகள்

Chess Competition - நாமக்கல் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அளவிலான செஸ் போட்டிகள் நடைபெற்றது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அளவிலான செஸ் போட்டிகள்
X

நாமக்கல் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அளவிலான செஸ் போட்டிகள் நடைபெற்றது.

Chess Competition -தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் மகாபலிபுரத்தில் வருகிற 28ம் தேதி முதல் ஆகஸ்டு 10 வரை நடைபெறவுள்ளது. இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. 15 ஊராட்சி ஒன்றிய அளவில், 15 அரசு பள்ளிகளில் செஸ் போட்டிகள் நடைபெற்றது. மொத்தம் 4 பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டிகளில் 273 அரசு பள்ளிகளை சேர்ந்த 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் 974 மாணவர்களும், 825 மாணவிகளும் என மொத்தம் 1,799 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர்கள் சுப்பிரமணியன் (நாமக்கல்), பழனிசாமி (திருச்செங்கோடு), மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் உட்பட தலைமையாசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மேற்கொண்டனர்.

ஒன்றிய அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கு, மாவட்ட அளவிலான போட்டிகள் வருகிற 25ம் தேதி, நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் முதல் இரண்டு இடங்களை பெறும், 6 முதல் 8 வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், மாநில அளவில் நடைபெறும் பயிற்சி முகாம் மற்றும் போட்டிகளில் பங்கு பெறுவார்கள்.

மாவட்ட அளவில் முதல் இடங்களை பெறக்கூடிய 9 ஆம் வகுப்பு , 10 ஆம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவியர்கள் (4 மாணவர்கள், 4 மாணவிகள் ) 8 பேர் மகாபலிபுரத்தில் நடைபெறும் செஸ் போட்டியை ஆக.5ம் தேதியன்று பார்வையிடும் வாய்ப்பினை பெறுவார்கள்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 21 July 2022 6:17 AM GMT

Related News