என்.கொசவம்பட்டி மாரியம்மன் கோயில் பூட்டு உடைப்பு: கோயிலுக்கு போலீசார் சீல் வைப்பு

என்.கொசவம்பட்டி மாரியம்மன் கோயில் பூட்டு    உடைப்பு: கோயிலுக்கு போலீசார் சீல் வைப்பு
X

போலீசாரால் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ள, கொசவம்பட்டி, தேவேந்திரபுரம் மகா மாரியம்மன் கோயில்.

நாமக்கல் அருகே கொசவம்பட்டியில் உள்ள மகா மாரியம்மன் கோயில் பூட்டை மர்ம நபர்கள் உடைத்ததால், பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் கோயிலை பூட்டி சீல் வைத்தனர்.

நாமக்கல்,

நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட என்.கொசவம்பட்டி தேவேந்திரபுரத்தில், மகா மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் மெயின் கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த, நாமக்கல் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், கடந்த 2022ம் ஆண்டு, அந்த கோயில் திருவிழா நடத்துவது சம்மந்தமாக இருத்தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, அப்போது போலீஸ் மற்றும் வருவாய் துறையினர் கோயிலை பூட்டி சீல் வைத்தனர். அதையடுத்து, 3 ஆண்டுகளாக கோயில் திருவிழா நடத்தவில்லை.

இந்த நிலையில், கோயில் திருவிழா மீண்டும் நடத்த வேண்டும் என்பதற்காக, ஒரு தரப்பினர் பூட்டை உடைத்திருக்கலாம் என, போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து, பிரச்சினை எதுவும் ஏற்படாமல் இருக்கு, வருவாய்த்துறை உதவியுடன், மீண்டும் போலீசார் கோயிலை பூட்டி சீல் வைத்தனர். அதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story