நாட்டுக்கோழி விலை திடீர் வீழ்ச்சி – விவசாயிகள் அதிர்ச்சி

நாட்டுக்கோழி விலை திடீர் வீழ்ச்சி – விவசாயிகள் அதிர்ச்சி
X
பரமத்திவேலூர் வார சந்தையில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு, நாட்டுக்கோழி விலை சரிந்தது

நாட்டுக்கோழி விலை திடீர் வீழ்ச்சி – விவசாயிகள் அதிர்ச்சி

பரமத்திவேலூர் அருகே சுல்தான்பேட்டை – மோகனூர் பிரிவு சாலையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் நடைபெறும் நாட்டுக்கோழி சந்தையில், இந்த வாரம் விலை வீழ்ச்சி ஏற்பட்டது. பரமத்தி, கீரம்பூர், பாலப்பட்டி, பாண்டமங்கலம், பொத்தனூர் மற்றும் ப.வேலூர் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் வீட்டில் வளர்க்கும் நாட்டுக்கோழிகளை இங்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

பொதுவாக, இந்த சந்தையில் வியாபாரிகள் இடையிலான போட்டியில் நாட்டுக்கோழிகளுக்கு நல்ல விலை கிடைக்கும். ஆனால், கடந்த வாரத்தைவிட இந்த வாரம் கோழி வரத்து அதிகமாக இருந்தது. இதனுடன், குரு பெயர்ச்சி நாளையையொட்டி, அசைவ உணவை தவிர்க்கும் மக்கள் எண்ணிக்கையும் அதிகமாக இருந்ததால், விற்பனை குறைந்து, விலைத் தாழ்வு ஏற்பட்டது.

கடந்த வாரம் ஒரு கிலோ நாட்டுக்கோழி ரூ.650க்கு விற்பனையான நிலையில், இந்த வாரம் அது ரூ.500க்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். விலையால் வருமானம் பாதிக்கப்பட்டு விவசாயிகள் ஏமாற்றத்துடன் சந்தையை விட்டு திரும்பினர்.

Tags

Next Story