மேட்டூர் அணை — மே மாதத்தில் நீர் திறக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை

மேட்டூர் அணை — மே மாதத்தில் நீர் திறக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை
நாமக்கல் மாவட்டத்தில், மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்கள் வழியாக ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதத்தில் விவசாய பாசனத்திற்கு நீர் திறக்கப்படும். இதன் மூலம் சுமார் 45,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன நன்மை பெறுகின்றன. இந்த நிலப்பரப்பில் நிலத்தடி நீர்மட்டம் உயரவும் காரணமாக இருந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளில் வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்து வருகின்றது. குறிப்பாக, கொங்கு மண்டல பகுதிகள் ஆகிய சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் சூடான காலநிலை விவசாயத்தை பெரிதும் பாதித்து வருகிறது.
இதனால், ஏரி, குளம், குட்டைகளில் சேமிக்கப்பட்ட மழைநீர் வறண்டு போகின்றது. நிலத்தடி நீர் மட்டமும் சரிவில் உள்ளதால், விவசாயம், கால்நடைகள் மற்றும் குடிநீர் தேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனை முன்னிட்டு, கொ.ம.தே.க. பொதுச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ஈஸ்வரன் அவர்கள், இந்த ஆண்டில் பாசன நீர் திறப்பை ஆகஸ்ட் மாதம் வரை காத்திருக்காமல், முன்னதாகவே மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களுக்கு திறக்க வேண்டியதற்கான கோரிக்கையை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
2024-ம் ஆண்டில் மே 15-ஆம் தேதி இந்த நீர் திறப்பு நடைபெற்றது என்பதை மேற்கோளாகக் காட்டிய அவர், இவ்வாண்டும் தமிழக அரசு முன்வந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu