தாராபுரத்தில் திருடப்பட்ட மினி லாரி – 1 மாதத்திற்குப் பின் மர்ம நபர் பிடிபட்டார்

தாராபுரத்தில் திருடப்பட்ட மினி லாரி – 1 மாதத்திற்குப் பின் மர்ம நபர் பிடிபட்டார்
X
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், வாகனத்தை திருடியவர் தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் எனத் தெளிவுபடுத்தினர்.

திருடப்பட்ட ஈச்சர் மினி லாரி – சிசிடிவி காட்சியில் பிடிபட்டு, திருவையாறு ஆசாமி கைது :

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த சரவணன் (35) என்பவருக்குச் சொந்தமான ஈச்சர் மினி லாரி, கடந்த 2024 டிசம்பரில் அவரது வீட்டின் முன்பாக நிறுத்தியிருந்த நிலையில் மர்ம நபர்களால் திருடப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக தாராபுரம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், வாகனத்தை திருடியவர் தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் எனத் தெளிவுபடுத்தினர்.

தொடர்ந்து, உதவி ஆய்வாளர் மாரிமுத்து தலைமையிலான போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story