/* */

புதுச்சத்திரத்தில் ரூ.17.86 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலைகள்: அமைச்சர் துவக்கம்

புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.17.86 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரோடுகள் அமைக்கும் பணிகளை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

புதுச்சத்திரத்தில் ரூ.17.86 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலைகள்: அமைச்சர் துவக்கம்
X

புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் புதிய சாலை அமைக்கும் பணிகளை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்.

புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.17.86 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரோடுகள் அமைக்கும் பணிகளை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தத்தாத்திரிபுரம், நவணி பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட பகுதிகளில், புதிய ரோடுகள் அமைக்கும் பணி துவக்க விழா நடைபெற்றது. நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார்.

15-வது மத்திய நிதிக்குழு மானியத்திட்டத்தின் கீழ் ரூ.7.50 லட்சம் மதிப்பீட்டில் தத்தாத்திரிபுரம் பஞ்சாயத்து, சேவாகவுண்டம்பாளையத்தில் தனிநபர் குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகளுக்காக புதிய போர்வெல் அமைத்து மின்மோட்டர் பைப் லைன் அமைத்தல், ரூ.3.72 லட்சம் மதிப்பீட்டில் தத்தாத்திரிபுரம் பஞ்சாயத்து, சேவாகவுண்டம்பாளையத்தில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், ரூ.2.79 லட்சம் மதிப்பீட்டில் தத்தாத்திரிபுரத்தில் பேவர் பிளாக் சாலை அமைத்தல் ஆகிய பணிகளை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்.

பின்னர், மாநில நிதிக்குழு மான்ய திட்டத்தின் கீழ் ரூ.2.00 லட்சம் மதிப்பீட்டில் நவணி ஊராட்சி ரெட்டிப்புதூர் பகுதியில் சிமெண்ட் சாலை அமைத்தல், ரூ.1.85 லட்சம் மதிப்பீட்டில் நவணி பஞ்சாயத்து, ரெட்டிப்புதூர் அருந்ததியர் காலனியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட மொத்தம் ரூ.17.86 லட்சம் மதிப்பீட்டிலான புதிய சாலைகள் பணிகளை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்.

மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஸ்குமார், ஒன்றிய திமுக செயலாளர் கவுதம், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் செந்தில்குமார், புதுச்சத்திரம் பிடிஓக்கள் சரவணன், வனிதா உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Updated On: 8 Aug 2021 2:45 AM GMT

Related News