நாமக்கல்லில் ஆக்கிரமிப்புகளை அகற்றி கழிவுநீர் வடிகால் அமைத்துக் கொடுக்க ஐகோர்ட் உத்தரவு

பைல் படம்
நாமக்கல்,
நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட, 5வது வார்டில் காவிரி நகர் குடியிருப்புப் பகுதி உள்ளது. காவிரி நகர் 2வது தெருவில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான ரோடு தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால்,கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த மழை காரணமாக அந்த தெரு முழுவதும் மழைநீர் தேங்கியது. 2 மாதங்களுக்கு மேலாக மழை நீர் வடியாததால், கழிவு நீராக மாறி பெரும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வந்தது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். மாநகராட்சி மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதையொட்டி, அப்பகுதியைச் சேர்ந்த வக்கீல் விமல்குமார் என்பவர், இது குறித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அலுவலர்களின் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. விசாரணை முடிந்தபிறகு, இவ்வழக்கில் சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் சுப்ரமணியம் மற்றும் ராஜசேகர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட காவிரி நகர் பகுதியில் உரிய மழை நீர் வடிகால் வசதிகளை அமைக்க வேண்டும். மேலும் ரோடு ஆக்கிரமிப்புகளை அகற்றித் தர வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. தீர்ப்பு நகல் பெறப்பட்ட 12 வாரங்களுக்குள் மேற்கண்ட பணிகளை செய்து தர வேண்டும் என நாமக்கல் கலெக்டர், நாமக்கல் மாநகராட்சி கமிஷனர் மற்றும் நாமக்கல் தாசில்தாருக்கு இந்த உத்தரவை ஐகோர்ட் வழங்கியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu