/* */

நாமக்கல் மாவட்டத்தில் தொடர்மழையால் மரவள்ளிக்கிழங்கு விலை சரிவு

நாமக்கல் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் மரவள்ளிக்கிழங்கின் விலை சரிவடைந்து விவாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் தொடர்மழையால்  மரவள்ளிக்கிழங்கு விலை சரிவு
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், சேந்தமங்கலம், மோகனூர், பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கு பயிர் செய்து வருகின்றனர்.

இப்பகுதியில் விளையும் மரவள்ளிக் கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, நாமகிரிப்பேட்டை, ஆத்தூர், தலைவாசல் உள்ளிட்ட பகுதிகளில் சேகோ ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர்.

கிழங்கு ஆலையில் மரவள்ளிக் கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயாரிக்கப்படுகிறது. மரவள்ளிக் கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள் மரவள்ளிக் கிழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர்.

கடந்த வாரம் மரவள்ளிக்கிழங்கு டன் ஒன்றுக்கு ரூ. 6 ஆயிரம் வரை விற்பனையானது. மாவட்டம் முழுவதும் தொடர்மழை பெய்து வருவதால், விவசாயிகள் கிழங்கு அறுவடையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மரவள்ளிக்கிழங்கு அறுவடை அதிகரித்துள்ளதால், டன் ஒன்றுக்கு ரூ. 700 வரை விலை குறைந்து ஒரு டன் மரவள்ளிக்கிழங்கு ரூ. 5 ஆயிரத்து 300க்கு விற்பனையாகிறது. விலை சரிவால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Updated On: 14 Nov 2021 9:45 AM GMT

Related News