நாமக்கல் மாவட்ட விபத்துகளில் 3 பேர் மரணம்:போலீசார் விசாரணை

நாமக்கல் மாவட்ட  விபத்துகளில்    3 பேர் மரணம்:போலீசார் விசாரணை
X

பைல் படம்

நாமக்கல் மாவட்டத்தில் நடந்த பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்பாக போலீஸார் விசாரிக்கின்றனர்

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு விபத்துகளில் மூவர் உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.:

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்தவர் ராமசாமி (75), விவசாயி. இவர் நேற்று காளப்பநாயக்கன்பட்டியில் இருந்து காரவள்ளிக்கு செல்லும் மெயின் ரோட்டில் தனது டூ வீலரில் சென்று கொண்டிருந்தார். ஆத்துக்குட்டி பள்ளம் என்ற இடத்தின் அருகே சென்ற போது, எதிரில் ஒருவர் டூ வீலரில் வந்துகொண்டிருந்தார். அந்த இடத்தில் இரண்டு டூ வீலர்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ராமசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எருமப்பட்டி: எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிபட்டி பஞ்சாயத்து, கர்ணன் தெருவை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (62), ரியல் எஸ்டேட் அதிபர். சம்பவத்தன்று அவர் பொன்னேரியில் டீ குடித்துவிட்டு தனது டூ வீலரில் வீட்டுக்கு திரும்பி சென்றார். எருமப்பட்டி கன்னிமார் கோவில் வளைவு அருகே சென்றபோது ஒரு திருப்பத்தில் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே கவிழ்ந்தது. இதனால் கீழே விழுந்த சிவசுப்பிரமணியன் படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரிஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் சிவசுப்ரமணியன் உயிரிழந்தார். இது குறித்து, எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரமத்திவேலூர்: நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் காந்திநகரை சேர்ந்தவர் அய்யாவு. அவரது மகன் வீராசாமி (23). இவர் பரமத்திவேலூரில் உள்ள ஒரு தறிப்பட்டறையில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று, இரவு பரமத்தி அருகே, வீராசாமி தனது டூ வீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற லாரி மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த வீராசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கந்தம்பாளையம்: கந்தம்பாளையம் அருகே உள்ள ஆரியூர்பட்டி தண்ணீர் தொட்டி அருகில் நல்லூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சேவல் சண்டை நடத்தி, சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. போலீசாரைப் பார்த்ததும் அங்கிருந்து அவர்கள் தப்பி ஓடினர். இதில் திருச்செங்கோடு வாலரை கேட் பகுதியை சேர்ந்த சேகர் என்பவரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் கைதான சேகரிடம் இருந்து பணம் ரூ.500 மற்றும் சேவல் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story