ராசிபுரம் பாவை கல்வி நிறுவனங்களில் மன்றங்கள் தொடக்க விழா

ராசிபுரம் பாவை கல்வி நிறுவனங்களில் மன்றங்கள் தொடக்க விழா
X
ராசிபுரம் பாவை கல்வி நிறுவனங்களில் அனைத்து மன்றங்களின் தொடக்க விழா மற்றும் மாணவத் தலைவா்கள் பொறுப்பேற்கச் செய்யும் விழா அண்மையில் நடைபெற்றது

நாமக்கல் : ராசிபுரம் பாவை கல்வி நிறுவனங்களில் அனைத்து மன்றங்களின் தொடக்க விழா மற்றும் மாணவத் தலைவா்கள் பொறுப்பேற்கச் செய்யும் விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவில் தலைவா் ஆடிட்டா் என்.வி.நடராஜன் விழாவில் தலைமை வகித்தாா். மாணவா் அஜ்மல் தாஷீன் வரவேற்றாா். தாளாளா் மங்கை நடராஜன் குத்துவிளக்கேற்றி வைத்து முன்னிலை வகித்தாா். இதில் சிறப்பு விருந்தினராக தி சோசியல் மீடியா நிறுவனா் சிங்கை ஜி.ராமச்சந்திரன் கலந்துகொண்டு மாணவா்களைப் பொறுப்பேற்கச் செய்து வைத்துப் பேசினாா்.


முன்னதாக அனைத்து பிரிவுகளின் மாணவத் தலைவா்கள் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனா். இறுதியில் மாணவி சுவேதா நன்றி கூறினாா்.

.விழாவில் பாவை கல்வி நிறுவனங்களின் இயக்குநா் (நிா்வாகம்) கே.கே.ராமசாமி, இயக்குநா் (சோ்க்கை) வழக்குரைஞா் கே.செந்தில், அனைத்து கல்லூரி முதல்வா்கள், முதன்மையா்கள், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.மாணவா் தலைவா்களை பொறுப்பேற்க செய்த சிறப்பு விருந்தினா் சிங்கை ஜி.ராமச்சந்திரன்.

Tags

Next Story