நாமகிரிப்பேட்டை மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க விழா - மக்கள் மன்றம் குவியும்..!
நாமக்கல் மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவாக வீரவணக்கம் நாள் பொதுக்கூட்டம் நாமகிரிப்பேட்டையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அதிமுக நாமக்கல் மாவட்டச் செயலாளருமான பி. தங்கமணி பங்கேற்று பேசினார். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் தினம் தேனாறும் பாலாறும் ஓடும் எனச் சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் தற்போது கஞ்சா, டாஸ்மாக், லாட்டரி சீட்டு தான் ஆறாக ஓடுகிறது.
தமிழகத்தை கருணாநிதியிடமிருந்து காப்பாற்றுவதற்கு தான் அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கி பொற்கால ஆட்சியை நடத்தினார். ஆனால் தற்போது தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு கெட்டுள்ளது. ஜெயலலிதா ஆட்சியின் போதும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் போதும் சட்டத்தின் ஆட்சி நடந்தது. ஆனால் தற்போது போதை மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது. எதிர்கட்சியாக இருக்கும்போது ஒரு அரசியல் ஆட்சியில் இருந்தால் ஒரு அரசியல் என திமுக இரட்டை வேடம் போடுகிறது என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu