முதல் முறையாக நாமக்கலில் ஓபன் ஹார்ட் பைபாஸ் சர்ஜரி : நாமக்கல் எம்.எம். மருத்துவமனை சாதனை
நாமக்கல் : நாமக்கல்-திருச்சி சாலையில், எம்.எம்., மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு, பெரிய மணலியை சேர்ந்த பார்வதி (60) என்ற பெண் நெஞ்சுவலி காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு ஆஞ்சியோகிராம் செய்து பார்த்தபோது, மூன்று குழாய்களிலும் அடைப்பு இருப்பது தெரியவந்தது. அதன்பின் அவருக்கு, ஓபன் ஹார்ட் பைபாஸ் சர்ஜரி செய்ய முடிவு செய்தனர்.
இதையடுத்து, இருதய சிறப்பு மருத்துவர் மணிவண்ணன் பரிந்துரைப்படி, பார்வதிக்கு ஓபன் ஹார்ட் பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டது. தொடர்ந்து, தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணிக்கப்பட்டு வீடு திரும்பினார்.
நாமக்கல்லில் முதல் முறையாக, ஓபன் ஹார்ட் பைபாஸ் சர்ஜரி செய்த மருத்துவமனை என்ற பெருமையை நாமக்கல் எம்.எம்., மருத்துவமனை பெற்றுள்ளது. இதுவரை, எம்.எம்., மருத்துவமனையில் 500-க்கும் மேற்பட்ட ஆஞ்சியோகிராம், 170-க்கும் மேற்பட்ட ஆஞ்சியோ பிளாஸ்டி செய்திருப்பது கூடுதல் சிறப்பாகும்.
இதுகுறித்து, எம்.எம்., மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் சிவகுமார் கூறுகையில், ''எந்த ஒரு தீவிர சிகிச்சையாக இருந்தாலும், 'கோல்டன் ஹவர்' என்று சொல்லக்கூடிய நேரத்தில் மருத்துவமனைக்கு வந்து விட்டால் உயிரை காப்பாற்ற முடியும் என்பதற்கு இதுவே உதாரணம்,'' என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu