புதன் சந்தை மாட்டுச்சந்தையில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனை

புதன் சந்தை மாட்டுச்சந்தையில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனை
X
புதுச்சத்திரம் யூனியன், புதன்சந்தையில் செவ்வாய்கிழமை தோறும் நடக்கும் மாட்டுச்சந்தையில் நேற்று 2 கோடி ரூபாய்க்கு மாடுகள் விற்பனையாகின.

நாமக்கல் : புதுச்சத்திரம் யூனியன், புதன்சந்தையில் செவ்வாய்கிழமை தோறும் மாட்டுச்சந்தை நடக்கிறது. இந்த சந்தைக்கு, வேலகவுண்டம்பட்டி, புதுச்சத்திரம், சேந்தமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

நேற்று நடந்த மாட்டுச்சந்தைக்கு, கேரளா வியாபாரிகள் வரத்து குறைந்ததால், விற்பனை அதிகாலை முதல் மந்தமாக இருந்தது. இதனால், கடந்த வாரம், 2.5 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்த நிலையில், இந்த வாரம் குறைந்து, 2 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story