/* */

ஜே.கே.கே.நடராஜா பள்ளியில் மாணவர் தலைமையில் மாநாடு! வரும் சனிக்கிழமை!

குமாரபாளையம் ஜே.கே.கே.நடராஜா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் மாணவர் தலைமையில் மாநாடு ஜூலை 8, 2023 ம் தேதி வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

HIGHLIGHTS

ஜே.கே.கே.நடராஜா பள்ளியில் மாணவர் தலைமையில் மாநாடு! வரும் சனிக்கிழமை!
X

நிகழ்வின் தலைப்பு : மாணவர் தலைமையில் மாநாடு"(SLC)

நிகழ்விடம் : நடராஜா வித்யால்யா கலையரங்கம் .

ஜேகேகே நடராஜா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி.

நிகழ்ச்சி நடக்கும் தேதி : (8/07/2023) சனிக்கிழமை

நிகழ்ச்சி நடக்கும் நேரம் : காலை 10 மணி முதல் 12 30 மணி வரை.

தலைமை : தாளாளர் திருமதி. ந.செந்தாமரைஅம்மாஅவர்கள்,

ஜே.கே.கே நடராஜா கல்வி நிறுவனம்.

முன்னிலை : நிர்வாக இயக்குநர்

திரு.ஓம் சரவணா, ஐயா அவர்கள் ஜே.கே.கே நடராஜா கல்வி நிறுவனம்.

தொகுப்புரை:

P. உஷா மற்றும் S.Y.ஹரிணி

பன்னிரண்டாம் வகுப்பு (வணிகவியல் பிரிவு)

வரவேற்புரை : S.Y. ஹரிணி

பன்னிரண்டாம் வகுப்பு (வணிக கணிதப் பாடப் பிரிவு)

நிகழ்வின் சிறப்புரை:

பன்னிரண்டாம் வகுப்பு வணிகவியல், மற்றும் வணிக கணிதப் பாடப்பிரிவு மாணவ மாணவிகள்.

கூட்டமைப்பின் பொருள் மற்றும் இயல்புகள்:


கூட்டமைப்பு என்பது எல்லோரும் சேர்ந்து நடத்தப்படும் தொழிலின் இலாபத்தையும் நட்டத்தையும் பகிர்ந்து கொள்வதே கூட்டமைப்பாகும்.

கூட்டமைப்பின் இயல்புகளான உடன்பாட்டு உறவு, வணிகத்தன்மை, இலாப்பகிர்வு, பரஸ்பர முகமை போன்றவை ஆகும்.

கூட்டமைப்பின் நன்மை தீமைகள்:

கூட்டமைப்பின் நன்மைகளான அதிகலாபம், சிறந்த தொழில் முடிவுகள், வேலைப்பகிர்வு மற்றும் உயரிய மேலாண்மை திறன் போன்றவை ஆகும். கூட்டமைப்பின் தீமைகளான இணக்கமின்மை மற்றும் சட்டப்பூர்வநிலை இன்மை போன்றவைகளை கண்டுணர்தல்.



கூட்டாளிகளின் பதிவு மற்றும் உரிமைகள்:

இந்திய கூட்டமைப்பு சட்டத்தின்படி, ஒரு நபர் வணிகம் செய்ய கூட்டமைப்பில் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் இல்லை.மேலும் ஒரு நபர் கூட்டமைப்பு நிறுவனத்தில் பதிவு செய்ய விரும்பினால் நிறுவனத்தின் பெயர், வணிகத்தின் தலைமையிடம் மற்றும் கூட்டமைப்பின் காலம் ஆகியவை போதுமானதாகும். கூட்டாளிகள் தங்களின் உரிமைகள், கடமைகள் மற்றும் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும்.

கூட்டாளிகளின் வகைகள் மற்றும் பொறுப்புக்கள்:


உழையா கூட்டாளி, உழைக்கும் கூட்டாளி, பெயரளவு கூட்டாளி, இரகசிய கூட்டாளி, இளவர் கூட்டாளி போன்றவர்கள் தங்களின் பொறுப்புகளான கூட்டு மற்றும் தனித்தனியான பொறுப்புகளோடு மூன்றாம் நபருக்கு ஏற்பட்ட நட்டத்தையும் பொறுப்பேற்றுக் கொள்வார்கள்.

கூட்டாளிகளின் நற்பெயரின் தன்மை:


நற்பெயர் ஒரு புலனாக நிலை சொத்து, இதற்கென தனியாக உருவம் இல்லாததால் இது ஒரு புலனாக சொத்து என்பார்கள். இதை பார்க்கவோ தொட்டு உணரவோ முடியாது ஆகையால் கூட்டாளிகள் அனைவரும் நன்மதிப்பை நாடுவோம் நலமாய் வாழ்வோம்.

பங்குபெறுவோர் விபரம் :

முதல்வர் ,இருபால் ஆசிரிய பெருமக்கள் மற்றும் பெற்றோர்கள்.

பன்னிரண்டாம்வகுப்புவணிகவியல், மற்றும்வணிககணிதப்பாடப்பிரிவுமாணவமாணவிகள்,

நன்றியுரை

P. உஷாபன்னிரண்டாம்வகுப்பு (வணிகவியல்பாடப்பிரிவு)

Updated On: 5 July 2023 7:19 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு