அரங்கநாதா் கோயிலில் பக்தா்கள் வசதிக்காக இரும்பு கைப்பிடி கம்பிகள் அமைப்பு!
![அரங்கநாதா் கோயிலில் பக்தா்கள் வசதிக்காக இரும்பு கைப்பிடி கம்பிகள் அமைப்பு! அரங்கநாதா் கோயிலில் பக்தா்கள் வசதிக்காக இரும்பு கைப்பிடி கம்பிகள் அமைப்பு!](https://www.nativenews.in/h-upload/2025/02/12/1977072-yrtyt.webp)
நாமக்கல் : நாமக்கல் நகரின் மையப்பகுதியில் குடைவரை கோயிலான அரங்கநாதர் கோயில் உள்ளது. திருவரங்கத்துக்கு இணையாக இக்கோயிலில் பள்ளி கொண்ட பரந்தாமன் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இக்கோயிலுக்கு செல்ல சுமார் 100 படிகளில் ஏறிச் செல்ல வேண்டும். இதனால் முதியோர்கள், உடல் நலம் குன்றியோர் அங்கு செல்வது சிரமமாக இருந்தது.
இரும்பு கைப்பிடி கம்பிகள் அமைப்பு
தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயில் படிக்கட்டுகளில் பக்தர்கள் வசதிக்காக இரும்பு கைப்பிடி கம்பிகளை இருபுறத்திலும் அமைக்க வேண்டும் என ஆன்மிக இந்து சமயப் பேரவையினர் வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து சுமார் 100 அடி உயரத்திற்கு படிக்கட்டுகளின் இருபுறத்திலும் கம்பிகள் பொருத்தப்பட்டன. தொல்லியல் துறையினருக்கு நன்றி தெரிவித்த பேரவையினர், இரும்பு கைப்பிடி கம்பிகள் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை செய்தனர். அதன்பிறகு பக்தர்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
மேலும், அங்குள்ள வீர ஆஞ்சநேயர் கோயிலை ஒட்டிய விநாயகர் கோயிலை திறந்து வழிபடுவதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என இந்து அறநிலையத் துறைக்கு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிகழ்வில், பேரவையின் கௌரவ தலைவா் சோழாஸ் பி.ஏகாம்பரம், செயலாளா் பி.மாதவகுமாா் மற்றும் ஆன்மீக இந்து கூட்டமைப்பு தலைவா் சா்வானந்தா, இந்து சமய பேரவை தலைவா் எஸ்.எம்.கே.பாண்டியன், பாஜக ஆன்மிக அமைப்பு தலைவா் பி.வி. சின்னுசாமி, மத்திய அரசு வழக்குரைஞா் கே.மனோகரன், பக்தா்கள் கலந்து கொண்டனா்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu