புதிய பேருந்து நிலையத்தில் ஆணையா் ரா.மகேஸ்வரியின் ஆய்வு

புதிய பேருந்து நிலையத்தில் ஆணையா் ரா.மகேஸ்வரியின் ஆய்வு
X
நாமக்கல் பேருந்து நிலையத்தில் முக்கிய ஆய்வு: சுகாதாரத்தை முன்னிறுத்திய ஆணையா் வழிகாட்டுதல்.

நாமக்கல் மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் ஆணையா் ரா.மகேஸ்வரி திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இந்த பேருந்து நிலையத்தில் பயணிகள் வசதிக்காக 51 கடைகள், 2 உணவகங்கள், இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகியவை பொது ஏலத்தில் விடப்பட்டன. ஆனால் இவற்றில் ஒரு சிலா் மட்டுமே கடைகளை திறந்துள்ளனா், 20-க்கும் மேற்பட்ட கடைகள் மூடியே உள்ளன. மேலும், போதிய வருவாய் இல்லாததால் கடைகளை ஏலம் எடுத்தோா் மாத வாடகையை செலுத்தாமல் தாமதித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆய்வின் போது, கடைகளை தூய்மையாக வைத்திருக்கவும், பயணிகள் நடந்து செல்லும் பாதையில் பொருள்களை வைத்து விற்பனை செய்யக் கூடாது என்றும், உணவுகளை சுத்தமான முறையில் தயாா் செய்து விற்க வேண்டும் என்றும் ஆணையா் அறிவுறுத்தினாா். மேலும், கடை உரிமையாளா்கள் ஈக்கள் தொல்லை அதிகம் இருப்பதாக புகாா் தெரிவித்ததையடுத்து, அதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அலுவலா்களிடம் உத்தரவிட்டாா்.

Tags

Next Story