/* */

அரசை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு- மக்கள் அறிவிப்பு

அரசை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு- மக்கள் அறிவிப்பு
X

நாகப்பட்டினம் அருகே சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கடந்த 9 ஆண்டுகளாக செய்து தராத தமிழக அரசை கண்டித்து சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

நாகப்பட்டினத்தை அடுத்துள்ள நாகூர் சந்திரா கார்டன் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர கோரி கடந்த 9 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இந்த நிலையில் தொடர்ந்து பலமுறை மனுக்கள் அளித்தும் அதிகாரிகள், ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை என தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தை அறிவித்துள்ளனர். நாகூர் நாகை தேசிய நெடுஞ்சாலையில் அரசு அதிகாரிகளின் பார்வைக்காக தேர்தலை புறக்கணிக்க போவதாக பதாகை வைத்து தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

படுமோசமான சாலையால் அவதியடைந்து வருவதாக கூறியுள்ள அப்பகுதி மக்கள், குடிநீர், பாதாள சாக்கடை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் அல்லல்படுவதாகவும், மழை காலங்களில் குளம் போல் தேங்கி கிடக்கும் கழிவுநீரில் விஷ ஜந்துக்களின் அச்சுறுத்தல் இருந்து வருவதாகவும், வேதனை தெரிவித்துள்ளனர். அதிகாரிகள், அமைச்சர்கள் என பலரிடம் நேரில் முறையிட்டும் இதுவரை பலன் இல்லாத காரணத்தால், வரும் 6 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர்.

Updated On: 24 March 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. ஈரோடு
    சத்தி அருகே கடம்பூர் மலைப்பகுதி சாலையில் நடமாடிய சிறுத்தை