/* */

டவ் - தே புயலில் சிக்கிய 2 படகில் சென்ற 23 மீனவர்கள் இன்று நாகை வந்தனர்

நாகப்பட்டினத்தில் இருந்து 2 விசை படகில் மீன்பிடிக்க சென்ற 23 மீனவர்கள் கரை திரும்பினர்.

HIGHLIGHTS

டவ் - தே புயலில் சிக்கிய 2 படகில் சென்ற 23 மீனவர்கள் இன்று நாகை வந்தனர்
X

நாகப்பட்டினம் ஆரியநாட்டு தெருவில்  இருந்து மீன் பிடிக்க 2 விசை படகில் சென்ற 23 மீனவர்கள் டவ்-தே புயலில் சிக்சி இன்று நாகை துறைமுகத்திற்கு வந்தனர்.

நாகை அடுத்துள்ள சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த 9 மீனவர்கள் ஒரு விசை படகிலும், நாகை ஆரிய நாட்டு தெரு மீனவர்கள் 23 பேர் தனியாக இரண்டு விசை படகிலும் கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றனர்.

இந்நிலையில் கேரளா அருகே டவ்தே புயலில் நடுக்கடலில் படகு விபத்துக்குள்ளாகி படகு மூழ்கியதில் சாமந்தான் பேட்டை மீனவர்கள் 9 பேர் மாயமானார்கள். மீனவர்கள் இதுவரை மீட்கபடாத காரணத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

இந்த நிலையில் மாயமான மீனவர்களுடன் மீன்பிடிக்க இரண்டு படகில் தனியாக சென்ற 23 மீனவர்கள் இன்று நாகை துறைமுகம் வந்து சேர்ந்தனர். அவர்களை மீனவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.

மாயமான மீனவர்களை தேடும் பணியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வரும் நிலையில், கடலில் தத்தளித்த தங்களுக்கு கரை திரும்ப தமிழக மீன்வளத் துறை அதிகாரிகள் எந்த உதவியும் செய்யாமல் அவதூறாக பேசியதாக மீனவர்கள் குற்றம் சாட்டினர்.

Updated On: 30 May 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...