/* */

கொரோனா நிவாரண நிதியாக தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கிய நாகை எம்.பி

கொரோனா நிவாரண நிதியாக தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கிய நாகை எம்.பி
X

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் நோய்த்தடுப்பு பணிகளுக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா நிவாரண நிதி வழங்க பொதுமக்களுக்கு சமீபத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் திமுக அதன் கூட்டணி கட்சி சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதியாக வழங்க வேண்டுகோள் விடுத்தார். இந்தநிலையில் நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளருமான செல்வராஜ் தனது ஒரு மாத ஊதியமான ஒரு லட்ச ரூபாயை தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்காக நாகை மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயரிடம் வழங்கினார்.

மேலும் நாகை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாகை மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் தீவிர சிகிச்சை பிரிவு மூலம் சிகிச்சை பெற நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மற்றும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையை மக்கள் அதிக அளவில் நாடவேண்டியுள்ளதால், கடலோர மாவட்டமான நாகை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பிரிவை உடனே ஏற்படுத்த வேண்டும் தமிழக என அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்தார்.

Updated On: 21 May 2021 5:35 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  4. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  6. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  8. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  10. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!